'ஆசை', 'பூவெல்லாம் கேட்டுப்பார்', 'ரிதம்', 'சத்தம் போடாதே' போன்ற உணர்வுப் பூர்வமான படங்களை இயக்கியவர் வஸந்த். அவர் தற்போது இயக்கியிருக்கும் படம் 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்'.

எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன் மற்றும் ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளை கொண்டு இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் பூனே சர்வதேச திரைப்பட விழா, மும்பை திரைப்பட விழா, 23வது கேரள சர்வதேச விழாக்களில் விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றுவருகிறது.
மேலும் தற்போது நடைபெற்ற பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் ஆசியாவில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு விருது அளிக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தில் பார்வதி, லட்சுமி பிரியா, சந்திரமௌலி, காளீஸ்வரி ஸ்ரீநிவாசன், கருணாகரன், கார்த்திக் கிருஷ்ணா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். ஏகாம்பரம் மற்றும் ரவிசங்கரன் ஆகியோர் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை கவனித்துள்ளார்.