ஏமாற்ற முயன்ற போலி நபரை வெளுத்து வாங்கிய பிரபல நடிகை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மக்கள் தொடர்பாளர் எனக் கூறி போன் நம்பரை வாங்க முயன்ற நபரை ட்விட்டரில் பிரபல நடிகை ராஷ்மி கவுதம் வெளுத்து வாங்கினார்.

தமிழில் ‘கண்டேன்’ என்ற திரைப்படத்தில் நடித்த ராஷ்மி கவுதம், தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். எனினும் அந்த படங்கள் அவருக்கு பெரிதாக வெற்றியை கொடுக்காவிட்டாலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

அனைத்து விஷயங்களுக்கு தைரியமாக குரல் கொடுக்கும் ராஷ்மி கவுதமை ட்விட்டரில் ஒருவர் ஏமாற்ற முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிஆர் மேனேஜ்மெண்ட் எனக் கூறி ராஷ்மி கவுதமின் போன் நம்பரை வாங்க ஒரு நபர் முயற்சித்துள்ளார். இது தொடர்பான அவரது ட்வீட்டில், ஒருவிளமப்ர ஷூட்-க்காக உங்களை தொடர்புக் கொள்ள வேண்டும். உங்கள் அப்பாவின் நம்பரை நான் தொலைத்துவிட்டேன் என கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக ராஷ்மி, என் அப்பா எனக்கு 12 வயது ஆன போதே தவறிவிட்டார். என் அப்பாவின் நம்பர் உங்களிடம் எப்படி இருக்கும்? கள்ளத்தனமாக பெண்களை முட்டாளாக்க இது புதிய முயற்சி. திரைத்துறைக்கு அவப்பெயர் உண்டாக்குகின்றனர் என பதிலடி கொடுத்திருந்தார்.

இதனையடுத்து, அந்த நபர் தனது ட்வீட்டை டெலிட் செய்ததுடன் நடந்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டு சில ட்வீட்களை பகிர்ந்துள்ளார்.

Rashmi Gautam has given befitting reply to a miscreant tricked her to get her phone number

People looking for online information on PR Management, Rashmi Gautam will find this news story useful.