‘பேட்ட’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சர்கார்’ படத்திற்கு பின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ‘தலைவர் 166’ என்ற திரைப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.
சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடக்கவுள்ளதாக நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்த நிலையில், தற்போது இப்படத்தின் ஷூட்டிங் வரும் ஏப்.10ம் தேதி தொடங்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூடுதலாக நமக்கு கிடைத்த தகவலின்படி இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘துப்பாக்கி’ திரைப்படமும் முழுக்க முழுக்க மும்பை பின்னணியில் உருவாகியிருந்தது.