ராகவா லாரண்ஸ் நடன இயக்குநராக இருந்து ஹீரோவாகி, பின்னர் வெற்றிகரமான இயக்குநரானார். இவரது இயக்கத்தில் முனி , காஞ்சனா, காஞ்சனா2 என வெற்றி படங்களை தொடர்ந்து இயக்கி நடித்து வருகிறார்.

இவரது இயக்கத்தில் காஞ்சனா 3 வெளியாகவிருக்கிறது. பல்வேறு நலத் திட்ட உதவிகளை தொடர்ந்து செய்துவருகிறார். இவர் பல்வேறு குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவி வருகிறார்.
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், எனது பாதூகாப்பிற்கு வரும் போது இவர்கள் மிகவும் குழந்தைகள். தற்போது 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் அளவுக்கு வளர்ந்து விட்டனர். இவர்களுக்கு உங்களது வாழ்த்துக்களை தெரிவியுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
Hi dear Students Wish you all the best for your 12th board exam..! pic.twitter.com/lM2Bk5xY3f
— Raghava Lawrence (@offl_Lawrence) March 1, 2019