டோலிவுட்டின் புகழ்பெற்ற PR மற்றும் தயாரிப்பாளர் மகேஷ் S கோனேரு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
NTR குடும்பத்துக்கு நெருக்கமான இவர் Jr NTR ன் PR ஆக பணியாற்றியவர். பாலகிருஷ்ணா, Jr NTR, கல்யான் ராம் போன்ற நடிகர்களுக்கு பணியாற்றியவர். தளபதி விஜய் நடித்த பிகில், மாஸ்டர் படங்களை தெலுங்கில் விநியோகம் செய்தவர் தெலுங்கு தயாரிப்பாளர் S. M கோனேரு என்கிற மகேஷ் S கோனேரு.
இவர் பத்திரிக்கையாளராக இருந்து சினிமா துறைக்கு வந்தவர். ஈஸ்ட் கோஸ்ட் புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் '118', கீர்த்தி சுரேஷ் நடித்த 'மிஸ் இந்தியா' படங்களைத் தயாரித்தார். கடைசியாக அல்லரி நரேஷ் நடித்த 'சபகு நமஸ்காரம்' படத்தை தயாரித்திருந்தார்.