SHILPA SHETTY: ஷில்பா, ரிச்சர்டு கெர் 2007 முத்த சர்ச்சை!.. மும்பை நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Mumbai Court on shilpa shetty is victim Richard Gere obscenity case 2007: Gere நடிகை ஷில்பா ஷெட்டி, சில தமிழ் படங்களிலும் நடித்திருக்கும் பிரபல பாலிவுட்  முன்னணி நடிகை.

Advertising
>
Advertising

ஷில்பா ஷெட்டி ரிச்சர்ட் கீர் முத்த சர்ச்சை

பாலிவுட், தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்கள் அனைத்தையும் சேர்த்து பல திரைப்படங்களில் நடித்துள்ள ஷில்பா ஷெட்டி கடந்த 2007-ஆம் ஆண்டு ஏப்ரல் 15 அன்று எயிட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது அவரது கன்னத்தில் ரிச்சர்ட் கீர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.

விழிப்புணர்வு நிகழ்வு

இந்திய சரக்கு வண்டி ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பான உடலுறவு குறித்த எயிட்ஸ்  விழிப்புணர்வை வலியுறுத்தவும் வகையில் நியூ டெல்லியில் நடந்த அந்த பேரணியின் ஒரு பகுதியாக ஷில்பா ஷெட்டியும் ரிச்சர்ட் கீர் அங்கு செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது ஷில்பா ஷெட்டிக்கு ரிச்சர்ட் கீர் கொடுத்த முத்தம் விவகாரம் பரபரப்புக்கும் சிலரது விமர்சனத்துக்கும் உள்ளானது. இதன் தொடர்ச்சியாக சில பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களும் நடக்கத் தொடங்கியதை அடுத்து, அவற்றை பின்னர் போலீஸார் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

ஷில்பா ஷெட்டி, ரிச்சர்டு கீர் 

அதன் பின்னர் இது தொடர்பாக பேசியிருந்த நடிகை ஷில்பா ஷெட்டி,  “இந்த செயல் நமது கலாச்சாரமல்ல என்பது புரிகிறது. எனினும் இந்த விசயம் அதிகம் உணர்ச்சிவசப்படும் அளவுக்கு பெரிதானது அல்ல. மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்கிறேன்.” என்று கூறியிருந்தார். இதேபோல் ரிச்சர்டு கீரும் இது தொடர்பாக வருத்தம் தெரிவித்தார்.

புகார் மனு

ஆனாலும் இதனைத் தொடர்ந்து ஷில்பா ஷெட்டிக்கு எதிராக  நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தொடரப்பட்டது. இந்நிலையில் தற்போது இதுகுறித்த கருத்தினை மும்பை நீதிமன்றம் வெளியிட்டதுடன், இந்த விவகாரம் சமந்தப்பட்ட அந்த புகார் மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது.

ஷில்பா ஷெட்டி பாதிக்கப்பட்டவர்..

அதன்படி இந்த விவகாரத்தில் ஷில்பா ஷெட்டியை பாதிக்கப்பட்டவராகவே கருதப்பட வேண்டும் என்று மும்பை நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஷில்பா ஷெட்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர் மீதான இந்த விவகாரத்தை துரிதமாக விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்ததற்கும் தற்போது மும்பை நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

விடுவிப்பு

ஆம், கடந்த 2007, ஏப்ரல் 15 அன்று குறிப்பிட்ட அந்த எயிட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ஷில்பா ஷெட்டி கன்னத்தில் ரிச்சர்ட் கீர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த  இவ்வழக்கு விவகாரத்தில் இருந்து நடிகை ஷில்பா ஷெட்டி விடுவிடுவிக்கப்பதாகவும் மும்பை நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது.

Also Read: ஹன்சிகாவின் 50வது படம்.. கௌரவ தோற்றத்தில் சிம்பு? ரிலீஸ் விஷயத்தில் பரபரப்பு அப்டேட்..!

தொடர்புடைய இணைப்புகள்

Mumbai Court shilpa shetty is victim Richard Gere obscenity case

People looking for online information on Shilpa Shetty, Shilpa shetty is victim, Shilpa shetty Richard Gere, Shilpa Shetty Richard Gere obscenity case, Shilpa shetty victim will find this news story useful.