தல அஜித்துடன் ‘மங்காத்தா’ இயக்குநர் திடீர் சந்திப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தல அஜித்தை இயக்குநர் வெங்கட் பிரபு திடீரென சந்தித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வெங்கட் பிரபு-அஜித் கூட்டணியில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான ‘மங்காத்தா’ திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது தமிழ் சினிமாவில் பார்ட்-2 சீசன் ட்ரெண்டாகி வருவதால், ‘மங்காத்தா 2’ எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் வெங்கட் பிரபு, ‘உங்கள் எல்லோருக்கும் மங்காத்தா 2 எப்போது வரும் என்ற கேள்வி இருக்கும்… எனக்கும் அந்த ஆசை உண்டு… அந்தப் படத்தை மீண்டும் பண்ணலாமா ? அல்லது வேண்டாமா ? என்ற பயம் எனக்கு இருக்கிறது… ஆனால் அஜித்துடன் கண்டிப்பாக மீண்டும் இன்னொருப் படம் பண்ணுவேன்’ எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று திடீரென அஜித்தை சந்தித்து அந்தப் புகைப்படத்தை வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘மங்காத்தா 2’ ரெடி என உற்சாகத்தில் உள்ளனர்.

தற்போது போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கி வரும் ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித் நடித்து வருகிறார். ‘தல 59’ என்றழைக்கப்படும் இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு மே.1ம் தேதி ரிலீசாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Mankatha Director Venkat Prabhu met Thala Ajith

People looking for online information on Ajith Kumar, Mankatha, Thala 59, Venkat Prabhu will find this news story useful.