பிரபல இளம் பாடலாசிரியருக்கு ஷங்கர் படத்துல இப்படி ஒரு ROLE-ஆ?.. அவரே பதிவிட்ட மாஸ் ட்வீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம் சரண் நடிக்கும் புதிய திரைப்படம் #RC15 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.  

ராம் சரண் தவிர, கியாரா அத்வானி, ஜெயராம், சுனில், அஞ்சலி ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.  இப்படத்தின் துவக்க விழா இன்று ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக ராம் சரணின் தந்தையும் பிரபல நடிகருமான சிரஞ்சீவி, பிரபல மகதீரா, பாகுபலி படங்களின் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி, பிரபல ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் இவர்களுடன் இயக்குனர் லிங்குசாமி, பாடலாசிரியர் விவேக், பிரபல எழுத்தாளர் சு.வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதனிடையே இசையமைப்பாளர் தமன் இசையமைக்கும் இந்த படத்துக்கு பாடலாசிரியர் விவேக் வசனப்பணிகளை எழுதுவதாக அவரே தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தம்முடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

பிரபல ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இவர் சூர்யா நடித்த ‘24’ திரைப்படத்துக்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றவர்.

பாடலாசிரியர் விவேக் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளியான மெர்சல் திரைப்படத்தில் ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் எழுதியதன் மூலம் பிரபலம் ஆனார். தவிர நடிகர் சூர்யா நடித்த சூரரைப் போற்று படம் உட்பட பலதரப்பட்ட திரைப்படங்கள் பல முன்னணி ஹிட் பாடல்களை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: “போடுறா வெடிய!!”..தளபதி பட இயக்குநர் இயக்கிய சிவகார்த்திகேயன் பட மாஸ் ரிலீஸ் அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

Lyricist Vivek writes for Shankar Ram Charan RC15 விவேக்

People looking for online information on Lyricist Vivek, Ram Charan, RC15, Shankar, SS Rajamouli will find this news story useful.