மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக பிக் பாஸ் போட்டியாளரும், பாடலாசிரியருமான கவிஞர் சினேகன் போட்டியிடுகிறார்.

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரம், தேர்தல் அறிக்கை தயார் செய்வது, வேட்பாளர்களின் வேட்பு மனு தாக்கல் என தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
இந்நிலையில், உலகநாயகன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் பொதுக்கூட்டம் கோவையில் இன்று நடைபெற்றது. ‘மாற்றத்திற்கான துவக்கவிழா’ என்ற டேக்லைனுடன் நடைபெற்ற இந்த பொதுக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக மக்களவை தேர்தலில் போட்டியிடும் 2ம் கட்ட வேட்பாளர்களின் பட்டியல் வெளியானது.
அதில் சில முக்கிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலில் பிக் பாஸ் பிரபலம் கவிஞர் சினேகனும் இடம்பெற்றுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக சிவகங்கை தொகுதி வேட்பாளராக சினேகன் அரசியலில் களமிறங்குகிறார்.
இந்த மக்களவை தேர்தலில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் போட்டியிடவில்லை என பொதுக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் 2019 மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் பட்டியல்#MNMCandidates pic.twitter.com/YJXydnVLSa
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) March 24, 2019