BREAKING: நயன்தாரா, சிவகார்த்திகேயனுக்கு அடுத்து விஜய் சேதுபதி படம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள ‘ஐரா’ திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

கேஜேஆர் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள ‘ஐரா’ திரைப்படம் வரும் மார்ச்.28ம் தேதி ரிலீசாகவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ஹீரோ’ படத்தை இந்நிறுவனம் தயாரிக்கிறது.

‘இரும்புத்திரை’ இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘ஹீரோ’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மற்றொரு நடிகையாக ‘நாச்சியார்’ படத்தில் நடித்த இவானா நடிக்கிறார்.

தற்போது சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்திற்கு அடுத்ததாக கேஜேஆர் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் அடுத்தப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் ‘ரம்மி’,‘பண்ணையாரும் பத்மினியும்’,‘தர்மதுரை’போன்ற படங்களில் நடித்த சூப்பர்ஹிட் ஜோடியான விஜய் சேதுபதி-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

KJR studios to produce Vijay Sethupathi - Aishwarya Rajesh's next film

People looking for online information on Airaa, Hero, KJR Studios, Nayanthara, Sivakarthikeyan, Vijay Sethupathi will find this news story useful.