ஹிந்தியில் ரீமேக்காகும் தமிழ் சூப்பர் ஹிட் ஹாரர் காமெடி படத்தில் தோனி ஹீரோயின்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹாரர் காமெடி என தமிழ் சினிமாவிற்கு புதிய ஜானரை உருவாக்கிய படம் 'காஞ்சனா'. ராகவா லாரண்ஸ் இயக்கி நடித்த இந்த படம் தமிழ் சினிமாவின் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. அதனைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து இந்த படத்தின் மூன்றாம்  பாகம் தற்போது உருவாகிறது. இந்நிலையில் 'காஞ்சனா' திரைப்படம் இந்தியில் ரீமேக்காக விருப்பதாகவும் இந்த  படத்தை ராகவா லாரன்ஸ் இயக்க அக்ஷய் குமார் நடிக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தில் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கவிருக்கிறாராம். இவர் 'எம்.எஸ்.தோனி தி அன்டோல்டு ஸ்டோரி' படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் 'பரத் அனே நேனு', ராம் சரணுடன் 'வினய விதேய ராமா' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

பாலிவுட்டில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர் அக்ஷய் குமார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக நடித்து தமிழ் சினிமாவிலும் பிரபலமாகியுள்ளார்.

Kiara advani pair with Akshay kumar Kanchana hindi remake

People looking for online information on Akshay Kumar, Kanchana, Kiara Advani, Raghava Lawrence will find this news story useful.