கோலார் தங்க சுரங்கத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான கன்னடப் படமான கேஜிஎப், பல்வேறு மொழிகளில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஹீரோவாக நடித்து மற்ற மொழிகளிலும் பிரபலமானவர் யாஷ்.
இந்நிலையில் கர்நாடகா காவல்துறையினர், பரத் என்ற கூலிப்படைத் தலைவனை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட பரத், நடிகர் யாஷை கொலை செய்ய திட்டம் வைத்திருப்பதாக பல்வேறு தொலைக்காட்சி மற்றும் இணையதளங்கள் செய்திகள் வெளியிட்டன.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் யாஷ், கர்நாடக கூடுதல் காவல் ஆணையர் அலோக் குமாரிடமும், உள்துறை அமைச்சர் எம்பி படில் ஆகியோரிடம் இதுகுறித்து விசாரித்தேன். கொலை செய்ய திட்டமிட்டிருக்கும் பட்டியலில் என் பெயர் இல்லை என்று தெரிவித்தனர்.
எப்பொழுதெல்லாம் இந்த மாதிரி கைது நடவடிக்கிறதோ அப்பொழுதெல்லாம் அதில் என் பெயர் அடிபடுகிறது. இது எனக்கும் எனது குடும்பம் மற்றும் ரசிகர்களுக்கும் கவலை அளிப்பதாக உள்ளது.
இந்த மாதிரி செய்திகளை வெளியிடாதீர்கள் என நான் ஊடகங்களை கேட்டுக் கொள்கிறேன். மேலும் ஊடகங்கள் எங்கிருந்து இந்த மாதிரியான தகவல்கள் பெறுகிறார்கள் என தெரியவில்லை. அப்படி தெரிந்தால் அதனை உடனடியாக காவல்துறையினரிடம் அளியுங்கள் என்றார்.