சிவகார்த்திகேயனுக்கு பிறகு சிம்புவுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்துக்கு பிறகு சிம்பு, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் 'மாநாடு' என்கிற படத்தில் நடிக்கவிருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. அரசியலை மையமாக வைத்து உருவாகுவதாக கூறப்படும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என கூறப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவிருக்கிறார். இதனை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கல்யாணி பிரியதர்ஷன் ஏற்கனவே மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'ஹீரோ' படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவிருப்பதாக சில நாட்களுக்கு அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சத்யராஜ், சிவா, ரம்யா கிருஷ்ணன், சந்திரமௌலி, நிவேதா பெத்துராஜ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள பார்ட்டி திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்துக்கு பிரேம்ஜி இசையமைத்துள்ளார்.

Kalyani Priyadarshan pair with STR's Maanaadu After Sivakarthikeyan's Hero

People looking for online information on Hero, Kalyani Priyadarshan, Maanaadu, Simbu, Sivakarthikeyan, Str will find this news story useful.