BREAKING - ஜெயம் ரவியின் அடுத்தப்படத்தை இயக்கப்போவது யார் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஜெயம் ரவி நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்தில் இயக்குநர் அகமது இயக்கவிருக்கிறார்.

கார்த்திக் தங்கவேலு இயக்கத்தில் ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடிப்பில் வெளியான ‘அடங்கமறு’ திரைப்படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கும் ‘கோமாளி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும், சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், ‘என்றென்றும் புன்னகை’, ‘வாமனன்’, ‘மனிதன்’ திரைப்படங்களை தொடர்ந்து இயக்குநர் அகமது இயக்கவிருக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார். இப்படம் ராணுவத்தை மையப்படுத்தி உருவாகவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் அடுத்தடுத்து 3 திரைப்படங்களில் நடிக்க ஜெயம் ரவி ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், மோகன் ராஜாவின் ‘தனி ஒருவன் 2’ திரைப்படத்திலும் ஜெயம் ரவி நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Jayam Ravi and Director Ahmed join hands for a film based on military ’

People looking for online information on Ahmed, Jayam Ravi, Manithan will find this news story useful.