"நான் அடுத்த யாஷிகாவா..? உன் FAMILY, FRIENDS எல்லாம் பாவம்".. கொந்தளித்த M.S.பாஸ்கர் மகள்! VIDEO

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மூத்த தமிழ் நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யா, தமிழ் சினிமாவில் பிரபல டப்பிங் கலைஞராகவும், நடிகையாகவும் அறியப்படுபவர். 

Ishwarya Baaskar slams to netizen who compared with Yashika Video

ஐஸ்வர்யா பாஸ்கர் குறும்படங்களில் நடித்துள்ளதுடன், நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், ராஷ்மிகா மந்தனா உட்பட பல பிரபல நடிகைகளுக்கு டப்பிங் பேசியுள்ளார். அண்மையில் தான் இவருக்கு திருமணம் நடந்தது.

Ishwarya Baaskar slams to netizen who compared with Yashika Video

இதனிடையே தற்போது 'மணி ஹெய்ஸ்ட்' தொடரின் சீசன் 5 அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்துக்கு ஐஸ்வர்யா பாஸ்கர் டப்பிங் பேசியுள்ளார்.

Ishwarya Baaskar slams to netizen who compared with Yashika Video

நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி ஒளிபரப்பாகி வரும் இந்த பிரபல ஹாலிவுட் தொடரான ​​'மணி ஹெய்ஸ்ட்' சீரிஸில் டோக்யோ எனும் கதாபாத்திரத்திற்காக டப்பிங் பேசியுள்ளார். ​​

சமீபத்தில், தமது 27 வது பிறந்தநாளை கொண்டாடிய இவர், ஒரு மலைப்பகுதியில் கார் ஓட்டும் வீடியோவை வெளியிட்டு, "அமைதி மற்றும் அமைதிக்காக" என்று கேப்ஷன் பதிவிட்டிருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த ரசிகர் ஒருவர், "இது இன்னொரு யாஷிகாவின் நிலமை போன்றது" என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்த ஐஸ்வர்யா பாஸ்கர், “நான் பொதுவாக நெகடிவ் கமெண்டுகளுக்கு ரிப்ளை செய்வதில்லை. உங்கள் இதயத்தில் வெறுப்பு மற்றும் உங்கள் எண்ணங்களில் எதிர்மறையே உள்ளது!

உங்களைப் போன்ற ஒருவரின் வாழ்வில் உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்கள் இருப்பதற்காக நான் பரிதாபப்படுகிறேன்! நீங்கள் நேர்மறையான வாழ்க்கையை தொடர உதவி பெறுவீர்கள் என்று நம்புகிறேன்!” என காட்டமாகக் கூறியுள்ளார்.

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று புகழ்பெற்ற யாஷிகா ஆனந்த் சில வாரங்களுக்கு முன்புதான் சென்னை புறநகரில் ஒரு பெரிய விபத்தை சந்தித்ததால் காயம் ஏற்பட்டதுடன், அந்த விபத்தில் தன் தோழியையும் இழந்தார். தற்போது காயங்களிலிருந்து மீண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ‘சிறையில்’ காதலன்.. வெளியில் மூளையாய் செயல்பட்டு ரூ.200 கோடி மோசடியா? பிரியாணி பட நடிகை கைது!

"நான் அடுத்த யாஷிகாவா..? உன் FAMILY, FRIENDS எல்லாம் பாவம்".. கொந்தளித்த M.S.பாஸ்கர் மகள்! VIDEO வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ishwarya Baaskar slams to netizen who compared with Yashika Video

People looking for online information on Ishwarya Baaskar, Money Heist Season 5, Netflix, Trending, Yashika Aannand will find this news story useful.