புற்றுநோயிலிருந்து மீண்டுவந்த பிரபல பாலிவுட் நடிகர் ரசிகர்களிடம் உருக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'தி லஞ்ச் பாக்ஸ்', 'ஸ்லம்டாக் மில்லியனர்', 'லைஃப் ஆஃப் பை' போன்ற படங்களில் வித்தியாசமான வேடங்களில் நடித்து சர்வதேச அளவில் புகழ்பெற்றவர் இர்ஃபான் கான். 

இவர் நியூரோ என்டாக்ரின் ட்யூமர் எனப்படும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். அதன் காரணமாக அவர் லண்டனில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் இவர் தற்போது வெற்றிகரமாக புற்றுநோயிலிருந்து மீண்டுள்ளார்.  இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட அவர்,  வெற்றி பெற போராடுவதில், நாம் எவ்வளவு நேசிக்கப்படுபவர் என்பதை மறந்துவிடுகிறோம்.

சோதனை காலங்களில் இது நமக்கு நினைவுபடுத்தப்படுகிறது.  எனது பாதத் தடங்களை இங்கு விட்டு செல்வதற்கு முன் உங்களது அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றியுள்ளவனாக இருப்பதற்கு கடமைப்பட்டுள்ளேன்.

அதுவே என்னை குணமடையத் தூண்டியது.  நான் மீண்டும் உங்களுடன் பயணம் செய்ய இருக்கிறேன். எனது இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி கூறுகிறேன். என்றார்.

Irrfan Khan shares special note to his fans after getting cure from Cancer

People looking for online information on Cancer, Irrfan Khan, The Lunchbox will find this news story useful.