அடுத்த சம்பவம் போலயே?.. இடியட் படத்தில் வெளியான REDIN KINGSLEY நடிக்கும் கேரக்டர் போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் மிர்ச்சி சிவா மற்றும் நிக்கி கல்ராணி நடிக்கும் படமான இடியட் ஏப்ரல் 1 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

Advertising
>
Advertising

திரையில் இணைந்த லொள்ளு சபா கூட்டணி

விஜய் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற நய்யாண்டி நிகழ்ச்சியான லொள்ளுசபாவில் இருந்து ஏராளமான நடிகர்கள் தமிழ் சினிமாவுக்கு வந்து கலக்கி வருகின்றனர். அந்தவகையில் முன்னணியில் இருப்பவர் சந்தானம். நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் இப்போது ஹீரோவாக கலக்கி வருகிறார். இந்நிலையில் லொள்ளு சபாவில் பல எபிசோட்களை இயக்கி ஹிட்டுக்கு காரணமாக அமைந்த இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் தில்லுக்கு துட்டு என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் சந்தானம்

பேயைக் கலாய்த்த படம்

கடந்த 2016 ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான படம் தில்லுக்கு துட்டு. இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்திருந்தது. ஹாரர் காமெடி மாதிரியான படங்களிலே பேயையே  கலாய்க்க கூடிய பேட்டர்னை  பயன்படுத்தி, சந்தானத்தின் நடிப்பில்  ‘தில்லுக்கு துட்டு’ என்கிற வெற்றிப் படத்தைக் கொடுத்தவர் ராம் பாலா. மாபெரும் வெற்றி பெற்ற இப்படத்தைத் தொடர்ந்து சந்தானம் ராம்பாலா கூட்டணியில் அந்த படத்தின் இரண்டாம் பாகமான  தில்லுக்கு துட்டு 2 உருவாகி, அந்த படமும் பெரும் வெற்றி பெற்றது.

மிர்ச்சி சிவா கூட்டணி

தில்லுக்கு துட்டு 2 வெற்றுக்குப் பிறகு ராம் பாலா தற்போது மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி மற்றும் பலரது நடிப்பில் ‘இடியட்’ என்கிற முழுக்க முழுக்க பொழுதுபோக்கு படமொன்றை இயக்குநர் ராம் பாலா இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஸ்கிரீன் சீன் எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்தில் நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படமும் ராம்பாலாவின் முந்தைய படங்களான ஹாரர்-காமெடி வகையின் கீழ் வருகிறது. இதில் மிர்ச்சி சிவாவோடு ஆனந்தராஜ், ஊர்வசி, ரெட்டின்ஸ் கிங்ஸ்லி ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துவருகின்றனர். கடந்த ஆண்டே வெளியாக இருந்த இந்த திரைப்படம் கொரோனா தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படம் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

படத்தின் கதாபாத்திர அறிமுகம்

இதையடுத்து படத்தில் நடித்துள்ள நடிகர்களின் கதாபாத்திரங்களை வரிசையாக அறிமுகபப்டுத்தி வருகின்றது படக்குழு. சிவா, நிக்கி கல்ராணி, ஆனந்த ராஜ் மற்றும் ஊர்வசி கதாபாத்திரங்களை அடுத்து தற்போது காமெடியில் கலக்கி வரும் ரெட்டின்ஸ் கிங்ஸி கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். படத்தில் ரெட்டின்ஸ் பர்பி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டாக்டர் படத்தில் ரெட்டின்ஸ் நகைச்சுவை காட்சிகள் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்ற நிலையில் இப்போது அவர் நடிக்கும் படங்களுக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகியுள்ளது.

Idiot movie released comic reddins character poster

People looking for online information on Idiot, Mirchi Siva, Reddins kingsley will find this news story useful.