'ஒரு நாள் ஒரு டீம, ஏழு டீம் துரத்த...' விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன சிஎஸ்கே வீரர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த வருடத்துக்கான ஐபிஎல் போட்டிகள் மார்ச் 23 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 31, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி சென்னையை பேட் செய்யுமாறு கேட்டுக்கொண்டது. இதனையடுத்து மற்ற வீரர்கள் சொதப்பிய நிலையிலும் கேப்டன் தோனி 46 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார். 

அதன் காரணமாக சென்னை அணி 20 ஓவர்களில் 175 ரன்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 167 ரன்கள் மட்டுமே எடுக்க, சிஎஸ்கே அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது.

அதனைத் தொடர்ந்து, அந்த அணியின் நட்சத்திர வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், 'ஒரு நாள் ஒரு டீம ஏழு டீம் துரத்த அந்த டீம் தடய தாண்டி எம்எஸ் தோனி புடிச்சு தொங்க, அந்த தல மேட்சுல அடி வெளுக்க, என்னடா எழவு வாழ்க்கனு மேல பாத்தா ஐபிஎல் கப்பு கீழ சிஎஸ்கே டீம் ,  ஏழு டீமும் கப்பாவது மேச்சாவதுன்னு, கும்புடு போட்டு ஆஹானு சொன்னா. அது சென்னை ஐபிஎல் சூப்பர் டீலக்ஸ் நன்றி சேது ஜி' என்றார்.

Harbhajan singh thanks to Vijay Sethupathi for Super Deluxe dialogue

People looking for online information on CSK, Harbhajan Singh, IPL, IPL 2019, Super Deluxe, Vijay Sethupathi will find this news story useful.