பொள்ளாச்சியில் கல்லூரி மாணவியிடம் ஃபேஸ்புக் மூலம் பழகி, தனிமையில் வரவழைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய கொடூர கும்பலுக்கு நடிகர் ஜி.வி.பிரகாஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், பொள்ளாச்சியைச் சேர்ந்த சபரி ராஜன், சதீஷ், வசந்த குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக இருந்த திருநாவுக்கரசு, தான் சரணடைவதாக வீடியோ வெளியிட்டிருந்தார். பினவர் சொந்த ஊர் திரும்பும்போது போலீசார் அவரை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
இவ்விவாகரம் தொடர்பான விசாரணையில் புகார் கொடுத்த பெண் மட்டுமல்லாது பல பெண்களின் வாழ்க்கையை இந்த காமக் கொடூரர்கள் சீரழித்துள்ளனர். காதலிக்கிறேன் என்று சொல்லி பெண்களை ஏமாற்றி அழைத்துச்சென்று மிரட்டி, கூட்டாகச் சேர்ந்து அனுபவிப்பதுடன், ஆபாச வீடியோவும் எடுத்துப் பணம் பறித்தது தெரியவந்துள்ளது.
இந்த குற்றவாளிகளுக்கு அரசியல் தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், பொள்ளாச்சி பாலியல் குற்றம் தொடர்பாக விரிவான விசாரணை தேவை என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் இச்சமபவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அவரது ட்வீட்டில், ‘மிருகங்களினும் கேவலமான இந்த 4 பேரும் பெண்களை சித்ரவதை செய்து பாலியல் கொடுமைப்படுத்தியது வீடியோ பார்த்து நெஞ்சம் பதைபதைக்கிறது... இவர்களை பொது வெளியில் நடமாடவிடுவது சமூகத்திற்கு பேராபத்து.. பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்’ என ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
I strongly condemn these monsters ... மிருகங்களினும் கேவலமான இந்த 4 பேரும் பெண்களை சித்ரவதை செய்து பாலியல் கொடுமைப்படுத்தியது வீடியோ பார்த்து நெஞ்சம் பதைபதைக்கிறது... இவர்களை பொது வெளியில் நடமாடவிடுவது சமூகத்திற்கு பேராபத்து..#arrestpollachirapists #arrestpollachirapists pic.twitter.com/eMCl6sP9W1
— G.V.Prakash Kumar (@gvprakash) March 11, 2019