சித்தார்த்துடன் ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்தின் தலைப்பு இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'சொல்லாமலே', 'பூ' போன்ற உணர்வுப்பூர்வமான படங்களை எடுப்பதில் வல்லவர் சசி. விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக இவர் இயக்கிய 'பிச்சைக்காரன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மேலும் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான இப்படம் அங்கும் வசூல் சாதனை புரிந்தது.

அதனைத் தொடர்ந்து சித்தார்த், ஜி.வி.பிரகாஷை வைத்து ஒரு படத்தை அவர் இயக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்துக்கு இயக்குநர் சசி, அக்கா - தம்பி உறவினை புதிய கோணத்தில், அனைத்து தரப்பினரும் தங்களின் நிஜவாழ்க்கையோடு பொறுத்தி பார்க்கும் வகையில் திரைக்கதை அமைத்துள்ளாராம்.

அக்காவாக மலையாள திரையுலகின் முன்னனி நடிகை லிஜோ மோள் நடிக்க, தம்பியாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கிறார். லிஜோ மோளுக்கு ஜோடியாக சித்தார்த் நடிக்கிறார்.

மேலும் இந்த படத்தில் சித்தார்த், டிராஃபிக் இன்ஸ்பெக்டர் வேடத்திலும், ஜி.வி.பிரகாஷ் பைக் ரேஸராகவும் நடிக்கவிருக்கிறார்களாம். இந்த படத்தின் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்துக்கு சிவப்பு மஞ்சள், பச்சை என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த படத்தை அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பிள்ளை தயாரிக்கிறார். பிரசன்னகுமார் ஒளிப்பதிவு செய்ய சித்து குமார் இசையமைக்கிறார்.

GV Prakash and Siddharth's new movie directed by sasi titled as Sigappu Manjal Pachchai

People looking for online information on GV Prakash, Sasi, Siddharth, Sivappu Manjal Pachchai will find this news story useful.