ஆர்யா - சாயிஷாவின் திருமண விழாவில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய பிரபல இயக்குநர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆர்யா - சாயீஷா திருமணம் ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களது திருமணத்துக்கு பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

தமிழ் திரையுலகத்தின் சார்பில், சூர்யா, கார்த்தி, விஷால், குஷ்பு, சுந்தர்.சி, விஜய், சக்தி சௌந்தரராஜன், தனஞ்செயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர். 

இந்நிலையில் நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, டிக் டிக் டிக் படங்களின் இயக்குநர் சக்தி சௌந்தரராஜனும் விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.  அன்றைய தினம் அவரது பிறந்தநாள் விழா என்பதால் தம்பதியினர் முன்னிலையில் கேக் வெட்டி தனது பிறந்தநாளை மகிழ்ச்சிகரமாக கொண்டாடினார்.

ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா  தயாரிக்கும் டெடி என்ற படத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை சக்தி சௌந்தரராஜன் இயக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Director Shakti Soundar rajan celebrates his birthday on Arya and Sayyeshaa's marriage

People looking for online information on Arya, Marriage, Sayyeshaa Saigal, Shakti Soundar Rajan, Shakti Soundar rajan Birthday will find this news story useful.