இளைஞர்களை கவர்ந்த பப்ஜி- தமிழில் படமாகிறதா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சாருஹாசன் நடிப்பில் வெளியான ‘தாத 87’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் விஜய் ஸ்ரீ தனது அடுத்த திரைப்படத்தின் பணிகளை துவக்கியுள்ளார்.

விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், சரோஜா, ஜனகராஜ், ஆனந்த் பாண்டி, ஜெனி பல்லவி, அனு லாவண்யா உள்ளிட்டோர் நடித்த ‘தாதா 87’ திரைப்படத்தை கலை சினிமாஸ் கலைச் செல்வன் தயாரித்திருந்தார்.

தற்போது, இதே தயாரிப்பு நிறுவனத்தின் பேனரில் உருவாகவிருக்கும் தனது அடுத்த திரைப்படம் குறித்த தகவல்களையும், அந்த படத்திற்கு வைக்கப்படவுள்ள தலைப்பு பற்றியும் இயக்குநர் விஜய் ஸ்ரீ Behindwoods தளத்திடம் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

இயக்குநர் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவாகவிருக்கும் இரண்டவாது திரைப்படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான PUBG கேமின் பெயரை தனது படத்தின் தலைப்பாக பதிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமாக இப்படம் உருவாகவிருப்பதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். இது குறித்த கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

DhaDha 87 director Vijay Sri's next will be titled as PUBG

People looking for online information on Dhadha, DhaDha 87, PUBG, Vijay Sri will find this news story useful.