கேங்ஸ்டர்கள் எப்படி உருவாகுகிறார்கள் தெரியுமா? இதை பாருங்க..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.

‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘எனக்குள் ஒருவன்’, ‘முண்டாடுப்பட்டி’ போன்ற திரைப்படங்களை தயாரித்த சி.வி.குமார், ‘மாயவன்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த சி.வி.குமார் தற்போது ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

ஹீரோயினை மையமாக கொண்டு உருவாகியுள்ள ஆக்‌ஷன் திரைப்படத்தில் பிரியங்கா ருத் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் டேனியல் பாலாஜி, பகவதி பெருமாள், ஆடுகள் நரேன், கலையரசன், வேலு பிரபாகரன், அசோக் குமார், இயக்குநர் ராமதாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படம் உருவாகிய விதம் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. போதை பொருள் வர்த்தகத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைக்க போராடுபவர்கள் இடையிலான கதை தான் கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ். இந்த கதைக்காக நிறைய ஆய்வுகள் நடத்தி, இதில் தொடர்புடைய சிலரை நேரில் சந்தித்து இது பற்றிய விஷயங்களை சேகரித்தோம் என இயக்குநர் சி.வி.குமார் கூறியுள்ளார்.

சென்சாரில் ‘ஏ’ சான்றிதழ் பெற்ற இப்படம் தமிழ் புத்தாண்டையொட்டி வரும் ஏப்.12ம் தேதி ரிலீசாகவுள்ளது. சி.வி.குமாரின் திருக்குமரன் என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. கார்த்திக் தில்லை ஒளிப்பதிவு செய்ய, ஹரி டவுசியா இசையமைத்துள்ளார்.

கேங்ஸ்டர்கள் எப்படி உருவாகுகிறார்கள் தெரியுமா? இதை பாருங்க..! வீடியோ

C.V.Kumar's Gangs of Madras film's official making video has been released

People looking for online information on C V Kumar, Daniel balaji, Gangs of Madras, Thirukumaran entertainment will find this news story useful.