BREAKING: விஜய்யின் தளபதி 63 - அணியில் இணைந்த மற்றொரு இளம் நடிகை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடிகை ரெபா மோனிகா நடிக்கவிருக்கிறார்.

‘தெறி’, ‘மெர்சல்’ திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்-அட்லி கூட்டணியில் உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் கதிர், யோகிபாபு, டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு உருவாகி வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நமக்கு கிடைத்த தகவலின் படி இப்படத்தில் நடிகை ரெபா மோனிகா நடிக்கவிருப்பதாக தெரிகிறது.

ஜெய் நடித்த ‘ஜருகண்டி’, சந்திரமவுலியின் ‘டாவு’ திரைப்படங்களில் நாயகியாக நடித்த மலையாள நடிகை ரெபா மோனிகா தளபதி 63 திரைப்படத்தில் நடிக்கிறார். மகளிர் கால்பந்து அணியில் விளையாடும் வீராங்கனைகளில் ஒருவராக ரெபா மோனிகா நடிக்கவிருப்பக்கிறார்.

தற்போது தனது கதாபாத்திரத்திற்கான பயிற்சிகளில் ரெபா மோனிகா ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Breaking: Reba Monica John joins Thalapathy 63

People looking for online information on AGS Entertainment, Atlee, Nayanthara, Reba Monica John, Thalapathy 63, Vijay will find this news story useful.