ஆண்ட்ரியா - சார்பட்டா சந்தோஷ் பிரதாப் நடிக்கும் புதிய படம்! வெளியான FIRST UPDATE! புதிய ஸ்டில்ஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

1970 காலகட்டத்தில் வட சென்னையில் நடைபெறும் குத்துச்சண்டை பின்னணி சம்பவங்களின் தொகுப்பாக 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் ஆர்யா நடிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில் ஜூலை 22ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று பாராட்டுகளை குவித்தது.

இந்த படத்தில் தோன்றிய கபிலன், டான்சிங் ரோஸ், வேம்புலி, மாரியம்மா, லெட்சுமி, ரங்கன் வாத்தியார், கெவின் டாடி, ராமன் உள்ளிட்ட பல கதாபாத்திரங்களை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் ராமன் பாத்திரத்தில் நடிகர் சந்தோஷ் பிரதாப் நடித்து இருந்தார்.

சந்தோஷ் பிரதாப் தற்போது பிசாசு-2 படத்தில் நடித்து முடித்துள்ளார், அதனைத்தொடர்ந்து ஆண்ட்ரியா நடிப்பில் நடன இயக்குனர் பாபி ஆண்டனி இயக்குனராக அறிமுகமாகும் புதிய படத்தில் (தற்காலிக பெயர் "புரொடக்‌ஷன் No.3") நடிக்க உள்ளார். தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் அவர்களின் ஹோம் மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றது.

நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க,  ஆஷா சரத், காளி வெங்கட், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். உடன் ஷா ரா, ஜப்பான் குமார், வினோதினி, பால சரவணன், யுவலக்‌ஷ்மி ஆகியோர் நடிக்கின்றனர். படத்திற்கு ஒளிப்பதிவை அகில் ஜார்ஜ் மேற்கொள்ள, ரான் ஈதன் யோஹன் இசையமைக்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்

தயாரிப்பு - சுஜாதா விஜய்குமார் (ஹோம் மூவி மேக்கர்ஸ்)
இயக்கம் - பாபி ஆண்டனி
ஒளிப்பதிவு - அகில் ஜார்ஜ்
இசை - ரான் ஈதன் யோஹன்
படத்தொகுப்பு - சரத்குமார்
வசனம் - பாபி ஆண்டனி, ஆண்டனி பாக்யராஜ், சவரி முத்து
கலை - தினேஷ் குமார்
காஸ்டியும் டிசைனர் - அம்ரிதா ராம் (ஆண்ட்ரியா ஜெரிமியா), நவாதேவி ராஜ்குமார்
சண்டைப்பயிற்சி - GN முருகன்
எக்சிகியுடிவ் புரொடுயுசர் - சாய்
புரொடக்‌ஷன் எக்சிகியுடிவ் - சக்கரதாள்வார் G
மக்கள் தொடர்பு - சதிஷ் (AIM)

இன்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே துவங்கியது.

Bobby Antony turns director with Andrea Jeremiah

People looking for online information on Andrea Jermiah, Santhosh Pratap will find this news story useful.