VIDEO: "இந்த ரோஜாவ அவங்களுக்கு தான் டெடிகேட் பண்ணுவேன்!".. சிவாங்கியின் க்யூட் பதில்கள்! #BEHINDWOODSGOLDICONS

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் சிங்கர் குக் வித் நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான சிவாங்கி, Behindwoods Gold Icons விருது விழாவிற்கு வருகை தந்த போது அவரிடம் சில பொருட்கள் கொடுக்கப்பட்டது. நீங்கள் இவற்றையெல்லாம் டெடிகேட் பண்ணுவதாய் இருந்தால் யாருக்கு கொடுப்பீர்கள்? என்று கேட்டதற்கு சிவாங்கியின் பதில்களை இங்கு சுருக்கமாகக் காணலாம்.

முதலில் சிவாங்கியிடம் ஒரு ரோஜாப்பூ கொடுக்கப்பட்டது. அதனை யாரிடம் கொடுப்பீர்கள் என்று கேட்டதற்கு சிவாங்கி சொன்ன பதில் என்னவென்றால், “விஜய் டிவியின் குக் வித் கோமாளி,  சூப்பர் சிங்கர் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளரான ரவூஃபா மேடம்க்கு தான் இந்த ரோஜாவை கொடுப்பேன், நான் இன்று இங்கே நிற்பதற்கு அவர்தான் காரணம்” என்று பதிலளிக்கிறார். 

அடுத்து தனக்கு பிடித்த ஒரு ஜெல்லி (pudding) கொடுக்கப்பட்டதும் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கிறார். இது எப்படி உங்களுக்கு தெரியும் என்று கேட்க உங்களுக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என்று ஆராய்ச்சி பண்ணி நாங்கள் கண்டுபிடித்தோம் என்று கூறுகிறார் தாரா.

இதனை அடுத்து சிவாங்கி கையில் ஒரு கிரெடிட் கார்டு கொடுக்கப்பட்டது. இதை யாரிடம் தருவீர்கள் என்று கேட்டபோது, “இது யாரு எனக்கு கொடுத்தது ரொம்ப நன்றி” என்று முதலில் கலாய்க்கிறார் சிவாங்கி, பின்னர் இப்படி பல இடங்களில் டிராவல் பண்ணி பலவிதமான ஷாப்பிங் எல்லாம் செய்கிறீர்கள்? எப்படி நீங்கள் மேனேஜ் செய்கிறீர்கள் என்று கேட்ட போது, “நான் பெரிதாக செலவு பண்ணும் ஆள் இல்லை எனக்கு அவ்வளவு செலவும் கிடையாது. குறிப்பாக செலவு செய்தால் சாப்பாடு ஐட்டங்களுக்கு கண்டிப்பாக செலவு செய்வேன். குறிப்பாக இத்தாலியன் உணவு வகைகள் எல்லாவற்றையும் என்பது உண்டு. 

மற்றபடி தேவையற்ற பொருட்களை நான் வாங்குவதில்லை என்று கூறிக் கொண்டிருக்கும், சிவாங்கியிடம் எலக்ட்ரானிக் கேட்ஜெட்ஸ் என்று தாரா நினைவுபடுத்த ஆமாம் என்பதுபோல் சொக்கிப்போகும் சிவாங்கி, “போன்கள் என்றால் நான் பிரியப்பட்டு வாங்கி விடுகிறேன். நான் முதலில் அந்த பழக்கத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும். இப்போது ஒரு ஐபோன் வாங்கி இருக்கிறேன்.அடுத்து இன்னொரு போன் மாடல் வாங்க வேண்டுமென்று நினைக்கிறேன்.” என்று சிரிக்கிறார்.

VIDEO: "இந்த ரோஜாவ அவங்களுக்கு தான் டெடிகேட் பண்ணுவேன்!".. சிவாங்கியின் க்யூட் பதில்கள்! #BEHINDWOODSGOLDICONS வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Behindwoods Gold Icons Sivaangi cute dedication fun answers video

People looking for online information on BehindwoodsGoldIcons, Sivaangi will find this news story useful.