இந்த வருடத்துக்கான ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச் 23 ஆம் தேதி தொடங்கி பரபரப்பாக நடைபெற்றுவருகிறது. ஐபிஎல் குறித்த செய்திகளும் மீம்ஸ்களும் சமூக வலைதளங்களில் நாளுக்கு நாள் வைரலாகி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சன் ரைஸஸ் ஹைதராபாத் அணி சார்பாக அதன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், டேவிட் வார்னரிடமும் கேன் வில்லியம்சனிடமும் நடிப்புத் துறையில் அவர்களது லட்சியம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு டேவிட் வார்னர் சற்றும் யோசிக்காமல் 'பாகுபலி' என்றார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Want to know @davidwarner31's acting career goal?
— SunRisers Hyderabad (@SunRisers) March 26, 2019
Watch 👀 it till the 🔚 😉#OrangeArmy 🧡 #RiseWithUs pic.twitter.com/WPL3BERbFg