களைக்கட்டும் ஆர்யா-சாயீஷா திருமணம்- வரவேற்பு விழாவில் பங்கேற்ற பிரபலங்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஆர்யா, பெண்கள் வசீகரம் செய்யும் கனவு நாயகனாக வலம் வருகிறார். அவ்வப்போது நாயகிகளுடன் கிசுகிசுவில் சிக்கினாலும், எப்போதும் ஜாலியாக இருப்பதோடு, அனைவரையும் உற்சாகப்படுத்தவும் செய்வார்.

இந்நிலையில், ‘வனமகன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சாயீஷாவும், ஆர்யாவும் காதலர் தினத்தன்று தங்களது காதல் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டனர். இருவீட்டார் சம்மதத்துடனும் இவர்களது திருமண நிகழ்ச்சி ஹைதராபாத்தில் இன்ரும், நாளையும் நடைபெறுகிறது.

ஆர்யா-சாயீஷா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மும்பையில் நடைபெற்றுள்ளது. அதில் சஞ்சய் தத் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர். நடிகை சாயீஷா, பாலிவுட்டின் பழம்பெரும் ஜோடியான நடிகர் திலீப்குமார்- நடிகை சாயிரா பானுவின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.

ஹைதராபாத்தில் இன்று நடைபெறவுள்ள திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய நண்பர்கள் மட்டும் சில கோலிவுட் பிரபலங்கள் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Arya Sayyeshaa's wedding celebrations begins, pics goes viral

People looking for online information on Arya, Arya Sayyeshaa Wedding, GhajiniKanth, Sayyeshaa Saigal will find this news story useful.