'கஜினிகாந்த்', சூர்யாவின் 'காப்பான்' உள்ளிட்ட படங்களில் ஆர்யாவும் சாயீஷாவும் இணைந்து நடித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள விருப்பதாகவும் பிரபல ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் செய்திகள் இருவரும் முறைப்படி அறிவித்தனர்.
அதன்படி நேற்று (மார்ச் 10) இருவரது திருமணமும் ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் பல்வேறு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
அதனைத் தொடர்ந்து கல்யாண கோலத்தில் இருவரும் ரௌடி பேபி பாடலுக்கு நடனமாடும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.
#aryawedssayyeshaa #arya #sayeshasaigal #sayesha #wedding
A post shared by SUHAINA BANU ZAKKARIYA (@suhainabanuemz) on