மாரி இல்ல ஜி எய்த்த வீட்டு மேரி - ஜி.வி.பிரகாஷின் குப்பத்து ராஜா ஸ்னீக் பீக் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர்கள் ஜி.வி.பிரகாஷ், பார்த்திபன் இணைந்து நடித்துள்ள ‘குப்பத்து ராஜா’ திரைப்படத்தின் இரண்டாவது ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது. 

எஸ் ஃபோக்கஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘குப்பத்து ராஜா’ திரைப்படத்தை அறிமுக இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்கியுள்ளார். பூனம் பாஜ்வா, எம்.எஸ்.பாஸ்கர், யோகிபாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

வடசென்னை பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர், பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் இரண்டாவது சில நிமிட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

விறுவிறுப்பான காட்சிகள் இடம்பெற்றுள்ள இந்த வீடியோவில் ஜி.வி.பிரகாஷ்-யோகி பாபு இடையிலான காமெடி சீன்களும் இடம்பெற்றுள்ளன. முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து, இசையமைத்துள்ள இப்படம் நாளை (ஏப்ரல்.5)ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது.

மாரி இல்ல ஜி எய்த்த வீட்டு மேரி - ஜி.வி.பிரகாஷின் குப்பத்து ராஜா ஸ்னீக் பீக் வீடியோ வீடியோ

A Sneak Peek 02 video from G.V.Prakash's Kuppathu Raja has been released

People looking for online information on GV Prakash, Kuppathu Raja, Poonam Bajwa, Radhakrishnan Parthiban, Yogi Babu will find this news story useful.