'கொரோனாவிலிருந்து குணமடைந்த 90% பேருக்கு இந்த பிரச்சனை'... 'வுஹான் ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சி தகவல்!'...
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவின் வுஹான் நகரில் கொரோனாவிலிருந்து குணமடைந்த 100 பேரில் 90 பேருக்கு நுரையீரல் சேதம் அடைந்திருப்பது தெரியவந்துள்ளது
சீனாவின் வுஹான் நகரில்தான் முதன்முதலாக கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி, தற்போது உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் அங்கு கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ள 100 பேரை வுஹான் பல்கலைக்கழகத்தின் ஜாங்னான் மருத்துவமனை கடந்த ஏப்ரல் மாதம் முதல் கண்காணித்துவந்துள்ளது. அவர்களின் சராசரி வயது 59 எனக் கூறப்பட்டுள்ளது.
ஜூலையுடன் முடிந்த கண்காணிப்பின் முதல் கட்ட முடிவில், அந்த 100 பேரில் 90 பேருக்கு நுரையீரல் சேதம் அடைந்திருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களின் நுரையீரல் காற்றோட்டம் மற்றும் வாயு பரிமாற்ற செயல்பாடுகள் ஆரோக்கியமாக உள்ள மற்றவர்களின் நிலைக்கு மீளவில்லை என இந்த ஆய்வை நடத்திய டாக்டர் பெங் ஜியோங் தலைமையிலான குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் 3 மாதங்களுக்கு பிறகும் ஆக்சிஜன் எந்திரங்களை நம்ப வேண்டியுள்ளதாக பீஜிங் பல்கலைக்கழகத்தின் டோங்ஸிமென் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் லியாங் டெங்ஸியாவ் கூறியுள்ளார். அத்துடன் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களில் 65 வயதுக்குட்பட்டோரில் 10 சதவீதம் பேரின் உடலில் நோய் எதிர்ப்பு பொருள் (ஆன்டிபாடி) மறைந்து விடுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “கொரோனா தடுப்பூசி முழுசா எப்பதான் சாமி கெடைக்கும்?”.. முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள பிரிட்டன் ஆலோசகர்!
- தேனியில் மேலும் 278 பேருக்கு கொரோனா!.. விருதுநகரில் பாதிப்பு குறைகிறது!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்... இதயத்தை ரணமாக்கும் அதிர்ச்சி தகவல்!.. முழு விவரம் உள்ளே
- திடீரென அதிகரித்த எண்ணிக்கையால் 'கலங்கித்தவித்த' மக்கள்... 40 நாட்களுக்கு பின் 'மீண்டு' வந்த தமிழக மாவட்டம்!
- கொரோனா பாதிப்பு: முதலிடத்தில் இருந்த கோடம்பாக்கத்தை... 'முந்திய' புறநகர் மண்டலம்!
- 'இந்தியாவில் தயாராகும் 3 தடுப்பு மருந்துகள்'... 'தற்போதைய நிலை என்ன?'... 'ஐசிஎம்ஆர் இயக்குநர் தகவல்'...
- 'கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் தண்ணீர்!'... 'வெளியாகியுள்ள புதிய ஆய்வு முடிவு'...
- விருதுநகரில் மளமளவென அதிகரிக்கும் கொரோனா தொற்று!.. தேனியில் 6 ஆயிரத்தை கடந்தது பாதிப்பு எண்ணிக்கை!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்... சளைக்காமல் கோரத்தாண்டவம் ஆடும் வைரஸ்!.. முழு விவரம் உள்ளே
- 'எதிர்நீச்சல் போட்டு முன்னேறி வந்தாலும்... இவங்க சண்டையால'... 'டிக்டாக்'-இன் மர்ம பக்கங்கள்... 37 வயதில் சாதித்த டிக்டாக் அதிபர் சாங் யிமிங்!