பிறந்தவுடன் உலக சாதனை படைத்த அதிசய குழந்தை!
முகப்பு > செய்திகள் > World newsஜப்பானில் உள்ளங்கை அளவு குழந்தை பிறந்து உலகின் மிக சிறிய குழந்தை என்ற சாதனையைப் படைத்துள்ளது.
ஜப்பான் டோக்கியாவில் உள்ள பெண் ஒருவருக்கு கருவில் இருந்த குழந்தையின் வளர்ச்சி 6 மாதங்களுக்கு பிறகு தடைப்பட்டுள்ளது. அதன் பிறகு அப்பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தை 4 மாதங்களாக வளராத நிலையிலேயே இருந்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இப்பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் குழந்தையின் எடை வெறும் 268 கிராம்தான் இருந்துள்ளது. இருப்பினும் குழந்தை எந்த பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.
மேலும் குழந்தையை, தொடர்ந்து 6 மாதங்களாக உயர் அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்து மருத்துவர்கள் கண்காணித்து வந்துள்ளனர். தற்போது அந்த குழந்தை 3.238 கிலோ கிராம் எடையுடன் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகிலேயே மிகக்குறைந்த எடையுடன் பிறந்த குழந்தை என்ற சாதனையை அந்தக் குழந்தை படைத்துள்ளது. இதற்கு முன் கடந்த 2009 -ம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த ஆண் குழந்தை ஒன்று 274 கிராம் எடையுடன் பிறந்தது குறிப்பிடத்தக்கது.
OTHER NEWS SHOTS
தொடர்புடைய செய்திகள்