‘பத்திரமா ஒப்படைக்க வலியுறுத்தி பாகிஸ்தான் மக்கள் போராட்டம்’: நெகிழும் இந்தியர்கள்!
முகப்பு > செய்திகள் > World newsகாஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு புல்வாமா தாக்குதலை நிகழ்த்தியதை அடுத்து இந்தியா-பாகிஸ்தான் எல்லைச் சண்டை மூண்டது.
இதன் அடுத்தடுத்த கட்டங்கள் வளர்ந்த நிலையில் பாகிஸ்தானில் வான்வழித் தாக்குதலை புரியச் சென்றதாக இந்திய ராணுவ விமானி அபிநந்தன் பாகிஸ்தான் மக்களால் பிடிக்கப்பட்டு, பின்னர் பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டார். அவரை விடுவிக்கக் கோரி இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் அழுத்தம் அதிகரிக்கவும் தொடங்கியது.
பின்னர் அபிநந்தன் நலமுடன் இருப்பதற்கான ஆதாரமாக அவரே பாகிஸ்தான் ராணுவ வீரர்களிடம் பேசிய வீடியோ வெளிவந்தது. இந்த நிலையில் அவரை நாளை விடுவிக்கவுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட இந்திய ராணுவ விமானி அபிநந்தன் பத்திரமாக விடுவிக்கப்பட்டு தாயகத்திடம் ஒப்படைத்து இரு நாடுகளின் அமைதியை காக்க வேண்டும் என்று, பாகிஸ்தானின் லாஹூர் பிரஸ் கிளப்பின் முன்னர் அமைதிப்போராட்டம் நிகழ்ந்தது. இதனிடையே இந்த விடுதலை செய்தியை அறிந்தவுடன், அபிநந்தனை பத்திரமாக ஒப்படைக்க அம்மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
‘we demand safe return of abhinandan’ என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி பாகிஸ்தானில் குரல்கொடுத்த மக்களின் பேரன்பு புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதை அடுத்து அவர்களுக்கு நன்றி தெரிவித்து இந்தியர்கள் நெகிழ்ந்துருகி வருகின்றனர்.
OTHER NEWS SHOTS
தொடர்புடைய செய்திகள்
- 'ராணுவ விமானி அபிநந்தன் ஒரு வாரியர்’.. ‘கார்கில்’ புகழ் நச்சிகேட்டா நெகிழ்ச்சி!
- இந்தியா சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான் F-16 விமானத்தின் புகைப்படம் வெளியீடு!
- சித்ரவதை செய்யப்பட்டாரா அபிநந்தன்?.. ரத்தம் வடிய இழுத்துச்செல்லப்படும் வீடியோ!
- 'காணாமல் போன ஒரு விமானி பாகிஸ்தான் வசம் இருப்பது பற்றி ஆய்வு செய்கிறோம்’!
- 'பாகிஸ்தானிடம் சிக்கிய கமாண்டர் அபிநந்தன்'...கோரமாக தாக்கப்படும் காட்சிகள்...நெஞ்சை உலுக்கும் வீடியோ!
- ' இந்திய விமானியை கைது பண்ணிட்டோம்'...கைகள் கட்டப்பட்ட நிலையில்...வெளியாகியிருக்கும் வீடியோ!
- ‘எந்நேரமும் இந்திய ராணுவ வீரர்கள் தயாராக இருக்க வேண்டும்’: உள்துறை அமைச்சர்!
- 'உங்க அக்கப்போருக்கு ஒரு அளவே இல்லையா'?...தாக்குதலின் மாஸ்டர் மைண்ட் ஒரு தமிழர்...பரவும் புரளி!
- ‘பயங்கர சத்தம், கண் இமைக்கும் நேரத்தில் பறந்த விமானம்’.. இந்திய தாக்குதலை நேரில் பார்த்த பாகிஸ்தானியர்!
- 'என்ன வந்தாலும் பாத்துக்கலாம்'...நாங்க தயாரா இருக்கோம்...உச்சக்கட்ட அலெர்ட்டில் எல்லைப்பகுதி!