வேற்று கிரகவாசியின் வருகையா?..விண்தட்டா?.. வானில் தோன்றிய அதிசயம்..வைரலான வீடியோ!

முகப்பு > செய்திகள் > World news
By |

வானில் திடீரென வட்டவடிவில் பெரிய துளை போன்று தோன்றி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த திங்கள் கிழமை ஐக்கிய அரபு நாடுகளில், வானில் பெரிய துளை போன்று வட்டவடிவில் தோன்றியுள்ளது. இதனைக் கண்ட மக்களுக்கு ஆச்சரியமாகவும், குழப்பமாகவும் இருந்துள்ளது. விநோதமான இந்த நிகழ்வு சார்ஜா, மாஹதா, புராமி, ஓமன் உள்ளிட்ட பகுதிகளிலும் தெரிந்துள்ளது.

இதனை குறிப்பிட்டு டுவிட்டரில் பலரும், இது வேற்று கிரகவாசிகளின் வேலையாகத்தான் இருக்கும் என்றும், அவெஞ்சர்ஸ் படத்தில் வருவதுபோல இருக்கிறது எனவும் பகிர்ந்து வருகின்றனர். சிலர் விண்தட்டாக இருக்க வாய்ப்புள்ளது எனவும் கூறிவருகின்றனர்.

இது குறித்து அந்நாட்டு ஆய்வாளர்கள் விளக்கமளித்துள்ளனர். இது மேகங்களில் இருக்கும் நீரின் வெப்பநிலை, உறையும் வெப்பத்தைவிட குறைவாக இருந்து அங்கே `ice nucleation' என்பதே நிகழாமல் இருந்தால், `fallstreak hole' என்னும் இயற்கை நிகழ்வு உருவாகுகின்றது. இது போன்ற ஒன்றுதான் இங்கு நிகழ்ந்திருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சில நேரங்களில் 50 கிலோ மீட்டர் பரப்பளவில் கூட ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

SPACE, MYSTERY, UAE, VIRALVIDEO, FALLSTREAKHOLE

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்