‘மரணப்படுக்கையில்’.. தந்தையின் ‘விநோத’ ஆசையை நிறைவேற்றிய மகன்கள்.. ‘நெகிழ்ச்சியான சம்பவம்’..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் தந்தையின் விநோதமான கடைசி ஆசையை மகன்கள் நிறைவேற்றி வைத்துள்ளனர்.

அமெரிக்காவின் விஸ்கான்ஸின் மாகாணத்தைச் சேர்ந்த நாபர்ட் ஸ்கீம் (87) என்பவர் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். நாபர்ட் தன் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருந்ததை அறிந்த அவருடைய மகன்கள் அவருடைய கடைசி ஆசை குறித்து அவரிடம் கேட்டுள்ளனர். அதற்கு நாபர்ட் எனக்கு கடைசியாக உங்கள் 4 பேருடனும் சேர்ந்து ஒரு பாட்டில் பீர் அருந்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.

தந்தையின் இந்த விநோதமான ஆசையை அவருடைய மகன்கள் நிறைவேற்றி வைக்க, அதை அவருடைய பேரன் ஆடம் ஸ்கீம் புகைப்படமாக எடுத்துள்ளார். அந்தப் புகைப்படத்தை அவர் தாத்தாவின் மறைவுக்குப் பின் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அவர் பகிர்ந்த அந்தப் புகைப்படம் சில நிமிடங்களிலேயே 3,20,000 லைக்குகள், 31,000க்கும்  அதிகமாக ரீட்வீட்டுகள் செய்யப்பட்டு வைரலாகியுள்ளது.

 

 

TWITTER, US, FATHER, SON, BEER, VIRAL, PHOTO, GRANDSON

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்