'கொரோனா எனக்கு கடவுள் குடுத்த வரம், ஏன்னா'... 'அதிபர் டிரம்ப் சொல்லும் காரணம்!!!'... 'அதிரடி அறிவிப்புடன் வெளியான வீடியோ!!!'...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை கடவுள் தந்த வரமாகவே கருதுகிறேன் என அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த 1ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கும் அவருடைய மனைவி மெலனியாவுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்கள் இருவரும் வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்டதையடுத்து, ட்ரம்புக்கு காய்ச்சல் தீவிரமடைந்ததால் மேரிலாண்ட் மாகாணம் பெத்தெஸ்டாவில் உள்ள வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் கடந்த 2ஆம் தேதி அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ரெம்டெசிவர் உள்ளிட்ட மருந்துகள் தரப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் 4 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு டிரம்ப் நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கடற்படை ஹெலிகாப்டர் மூலம் அவர் வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள உடல் வீடியோவில், "எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை கடவுள் தந்த வரமாகவே கருதுகிறேன். கொரோனாவுக்கான மருந்து கண்டுபிடிப்பதன் அவசியத்தை அது கற்றுக் கொடுத்துள்ளது.

கொரோனாவை உருவாக்கி அமெரிக்கா மற்றும் உலகத்துக்கு பேரழிவு ஏற்படுத்தியதற்காக சீனா அதிக விலையை தர நேரிடும். கொரோனா எனக்கு கடவுள் செய்த மறைமுக ஆசீர்வாதம். எனக்குக் கிடைத்த சிகிச்சை உங்களுக்கும் கிடைக்க வழிவகை செய்வேன். அதை இலவசம் என அறிவிப்பேன்" எனத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே அதிபர் ட்ரம்ப் காய்ச்சல் போன்ற நோய் அறிகுறி இல்லாமல் இருந்து வருகிறார் எனத் தெரிவித்தாலும் அவர் கொரோனாவிலிருந்து முழுதும் விடுபட்டாரா என்பது பற்றி உண்மையான நிலவரம் தெரியவில்லை என சில அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்