‘நடுவானில் விமானம்.. ஜஸ்ட் கண்ணசந்த விமானி’.. கடைசியில் தண்டனை யாருக்கு தெரியுமா?
முகப்பு > செய்திகள் > World newsநடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது அயர்ந்த தூங்கிய விமானியின் வீடியோ ஒன்று வைரலாகி வருவதோடு பலரையும் பயமுறுத்தியுள்ளது இந்த வீடியோ.
எல்லா பயணிகளுக்கும் விமானத்தில் பறக்கும்போது கண்ணுக்குத் தெரியாத கடவுள் விமானிதான். அத்தகைய விமானி ஒருவர், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, பணியில் இருந்தபடியே உறங்கியுள்ளார். சீனாவைச் சேர்ந்த அந்த விமானி பொறுப்பின்றி விமானப்பணியின் போது தூங்கித் தூங்கி விழுந்ததை அருகில் இருந்த சக விமானி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் உலவ விட்டுள்ளார்.
சீனாவில் பெருமளவில் வைரலான இந்த வீடியோவில் வரும் விமானம் போய்ங் 474. இந்த விமானத்தில் பணி நேரத்தில் அயர்ந்து தூங்கிய விமானிதான் வெங் ஜியாகியூப் என்பவர். கிட்டத்தட்ட விமானியல் துறையில் 20 வருடங்களுக்கு மேலாக அனுபவம் நிறைந்த அவர், விமானத்தை இயக்கும் பொறுப்பில் இருந்துகொண்டும் டியூட்டி நேரத்தில் இருந்துகொண்டும் தூங்கிக்கொண்டிருந்துள்ளார்.
இதனை துணை விமானி வீடியோ எடுத்துள்ளார். இதனால் பணி நேரத்தில் தூங்கிய விமானிக்கும், அவர் தூங்குவதை பணி நேரத்தில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்த துணை விமானிக்கும் தண்டனைகள் அலுவல் ரீதியாக வழங்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் பற்றி பேசியுள்ள இந்த சீன ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், ‘பணி நேரத்தில் தூங்கிய விமானி தான் செய்தது தவறுதான் என புரிந்துகொண்டார். ஆனால் அதே சமயம், உடன் இருந்து துணை விமானியும் பணி நேரத்தில் சக விமானியை வீடியோ எடுத்துக்கொண்டிருந்துள்ளார். ஆகையால் இருவருமே தண்டிக்கப்பட்டுள்ளனர். எங்களுக்கு விமான பாதுகாப்புதான் முக்கியம்’ என்று கூறியுள்ளது.
OTHER NEWS SHOTS
தொடர்புடைய செய்திகள்
- 'விமானத்தை கடத்த முயற்சி'...அதிரடி தாக்குதல் நடத்திய 'கமாண்டோ வீரர்கள்'...பரபரப்பு சம்பவம்!
- பெங்களூரை அடுத்து சென்னையிலும் பற்றி எரிந்த 200 கார்கள்: திடீர் தீவிபத்தால் பரபரப்பு!
- ரயிலில் இருந்து தவறி விழுந்தவரை 1.5 கிமீ தூக்கிக்கொண்டு ஓடிய போலீஸ் கான்ஸ்டபிள்!
- ‘இனியாச்சும் எங்க அருமை புரியட்டும்’.. மனைவி,குழந்தைகள் எடுத்த விபரீத முடிவு!
- விமான கண்காட்சி பகுதியில் திடீர் தீ விபத்து, 100 கார்கள் எரிந்து நாசம், பரபரக்க வைக்கும் காட்சிகள்!