"ஆன்லைன்ல இப்படி ஒரு பிசினஸா?!!!... 19 வருஷமா இத வெச்சு சொகுசு வாழ்க்கை"... 'அதிரவைத்த பெண்... வெளியான 'பகீர்' தகவல்கள்!'...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் ஆன்லைன் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி அவருக்கு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் வசிக்கும் 63 வயது பெண்ணான கிம் ரிச்சர்ட்சன் கடைகளிலிருந்து பொருட்களை திருடி, அவற்றை இபே ஆன்லைன் தளத்தில் விற்று வந்துள்ளார். மேலும் அதில் கிடைத்த பணத்தை வைத்து அமெரிக்கா முழுவதும் சுற்றி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் சுமார் 19 ஆண்டுகளாக இதையே தொழிலாக வைத்திருந்த கிம் ரிச்சர்ட்சன் தற்போது கையும் களவுமாக சிக்கியுள்ளார். போலீசாரால் பொறி வைத்து பிடிக்கப்பட்ட அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளார். அங்கு அவர் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து அவருக்கு 54 மாத சிறை தண்டனையும், இதுவரை திருடப்பட்ட பொருட்களுக்கு இழப்பீடாக 3.8 மில்லியன் டாலர் தொகையும் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்