'புதிய சிக்கலில் H-1B விசா!'... 'அமெரிக்காவின் திடீர் அறிவிப்பால்... திண்டாடப்போகும் இந்திய IT ஊழியர்கள்??!' - "மறுபடியும் என்னப்பா பிரச்சினை...???"

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்க அரசு வெளிநாட்டு பணியாளர்களுக்கான ஹெச்-1பி விசாக்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் வேலை பெறுவதற்காக அந்நாட்டு அரசு ஹெச்-1பி விசாக்களை வழங்கிவருகிறது. ஹெச்-1பி விசா மூலம் மற்ற எல்லா நாடுகளை காட்டிலும் இந்தியர்களே அதிகம் பயனடைந்துவரும் சூழலில், முக்கியமாக அங்கு ஐடி நிறுவனங்களே ஏராளமான இந்தியர்களை பணியமர்த்தியுள்ளன. இந்நிலையில் தான் கொரோனா பாதிப்பின் விளைவாக அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளை உறுதிசெய்வதற்காக ஹெச்-1பி விசாக்களுக்கு டொனால்ட் ட்ரம்ப் அரசு தற்காலிக தடை விதித்தது.

இதையடுத்து தேர்தல் நெருங்கி வரும் வேளையில் ஹெச்-1பி விசாக்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. தற்போது மீண்டும் ஹெச்-1பி விசாக்களுக்கு அமெரிக்க அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இப்புதிய கட்டுப்பாடுகள் குறித்த விரிவான தகவல்கள் இன்னும் வெளியாகாதபோதும், அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பில் முக்கியத்துவமும், முன்னுரிமையும் அளிக்கும் வகையில் இந்த கட்டுப்பாடுகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் சாட் வுல்ஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொருளாதார பாதுகாப்பே உள்நாட்டு பாதுகாப்பின் முக்கிய அங்கம் என்ற காலகட்டத்தை நாம் எட்டியிருக்கிறோம். சுருக்கமாக சொன்னால், பொருளாதார பாதுகாப்பே நாட்டின் பாதுகாப்பு. இதை சரியாக கையாளுவதற்காக, அமெரிக்க தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்க சட்டரீதியாக நம்மால் இயன்ற எல்லாவற்றையும் மேற்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். கொரோனாவால் ஏற்கெனவே இந்த விசாவிலுள்ள பல இந்தியர்களும் வேலையிழந்து நாடு திரும்பிவரும் நிலையில், இந்த அறிவிப்பு இந்திய ஐடி நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்