'எப்படியாவது இந்த கொரோனாவ ஒழிச்சா போதும்'... 'பெரும் Risk-ஐ கையிலெடுக்கும் நாடு!!!'... 'கண்டிப்பாக பலனளிக்குமென ஆய்வாளர்கள் நம்பிக்கை!'...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை விரைவில் கண்டறிய இங்கிலாந்து ஆய்வாளர்கள் ஒரு ஆபத்தான முறையைக் கையிலெடுக்க முடிவு செய்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் சூழலில், அதற்கான தடுப்பூசியை கண்டறியும் முயற்சியில் பல நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், இங்கிலாந்து நாட்டின் இம்பீரியல் காலேஜை சேர்ந்த ஆய்வாளர்கள் தடுப்பூசியை விரைவில் கண்டறிய முதன்முறையாக ஒரு புதிய முயற்சியை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். மனித சவால் திட்டம் (Human Challenge Trial) எனும் இந்த புதிய முயற்சி கொரோனா வைரஸின் பரவலை குறைத்து, அதனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின்படி, தொடக்க நிலையில் நல்ல உடல்நலமுடன் உள்ள தன்னார்வலர்களின் உடலில்  கொரோனா வைரஸை செலுத்தி அதன் விளைவுகள் பற்றி பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதற்காக 18 முதல் 30 வயது வரையிலான தன்னார்வலர்களை பணியமர்த்த ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர். அந்த தன்னார்வலர்களுக்கு இருதய நோய்கள், நீரிழிவு அல்லது உடல்பருமன் போன்ற உடல்நல பாதிப்புகள் எதுவும் இருக்க கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர், தன்னார்வலரின் மூக்கு வழியே கொரோனா வைரஸானது உட்செலுத்தப்படும்.  இதுபோன்று ஒவ்வொரு தன்னார்வலரையும் ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள், கொரோனா பாதிப்புக்கு முன்பும், பாதிப்பு ஏற்பட்ட உடனும் என்ன நடக்கிறது என மிக கவனமுடன் கண்காணிப்பார்கள். ஒவ்வொரு நிலையிலும் என்ன நடக்கிறது என்பது பற்றி சரியாக ஆய்வு செய்து, அதன் முடிவுகளை தடுப்பு மருந்துகள் எப்படி வேலை செய்யும் எனவும், ஆற்றல்மிக்க சிகிச்சைகளை வழங்குவது எப்படி எனவும் அறிந்து கொள்வதற்கு ஆய்வாளர்கள் பயன்படுத்தி கொள்ள இருக்கிறார்கள்.

நல்ல உடல்நிலை உள்ள தன்னார்வலர்களின் உடலில் ஆய்வுக்காக வேண்டுமென்றே கொரோனா வைரஸை செலுத்தி பரிசோதிக்கும் இந்த ஆபத்தான முறை குறித்து பேசியுள்ள ஆய்வுக்குழுவினர், "நாங்கள் தன்னார்வலர்களின் பாதுகாப்பிற்கே முக்கியத்துவம் அளிப்போம். எந்தவொரு ஆய்வும் முழுவதும் ஆபத்து இல்லாமல் மேற்கொள்ளப்படுவதில்லை. எங்களால் முடிந்தவரை ஆபத்துகளை குறைப்பதற்கான பணிகளை உறுதிப்படுத்தி கொள்வதற்கு கடுமையாக உழைப்போம்" எனத் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்