இனி ரஷ்யாவை நம்ப முடியாது.. இங்கிலாந்து அதிபர் எடுத்த முக்கிய முடிவு.. அதிர்ச்சியில் உலக நாடுகள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ரஷ்யா - உக்ரைன் போரால் இங்கிலாந்தில் பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் சவூதி அரேபியாவிடம் இங்கிலாந்து அதிபர் போரிஸ் ஜான்சன் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது பல நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertising
>
Advertising

இந்தியில் பதில் சொன்ன அமைச்சர்.. அமைச்சர் கனிமொழி கொடுத்த ரியாக்ஷன்..அதுக்கப்பறம் நடந்தது தான் ஹைலைட்டே..!

போர்

உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி ரஷ்யா போர் தொடுப்பதாக அறிவித்தது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்து வருகிறது. ஒருபுறம் உலகளாவிய பங்குச் சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில் பெட்ரோல், டீசல் விலையும் அதிகரித்துவருகிறது.

இங்கிலாந்தில் உயர்ந்துவரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கருத்தில்கொண்டு சவூதி அரேபியாவிடம் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்ய திட்டமிட்டு இருக்கிறார் அந்நாட்டின் அதிபர் போரிஸ் ஜான்சன். இது அந்நாட்டு சட்ட நிபுணர்கள், மனித உரிமை ஆர்வலர்களை மட்டுமல்லாது பல நாடுகளையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

என்ன சிக்கல்?

மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக சவூதி ஊடக முகமை வெளியிட்ட செய்தியில்," கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஆயுத கடத்தல், தீவிரவாத செயல்பாடுகளில் ஈடுபடுவது உள்ளிட்ட குற்றங்களை செய்த 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது" எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

எதிர்ப்பு

81 பேருக்கு  ஒரே நாளில் மரண தண்டனையை சவூதி அரேபிய அரசு நிறைவேற்றியதை தொடர்ந்து, மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சட்ட நிபுணர்கள் இதனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இங்கிலாந்து நாட்டிலும் சவூதி அரேபியாவின் இந்த செயல் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், போரிஸ் ஜான்சன் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

இதுகுறித்துப் பேசிய ஜான்சன்," கடந்த காலங்களில் பலமுறை இதுபோன்ற சம்பவங்கள் குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறேன். இப்போதும் எழுப்புவேன். அதே நேரத்தில் அந்த நாட்டுடன் (சவூதி அரேபியா) சுமூகமான உறவில் இருப்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டியுள்ளது" எனத் தெரிவித்திருக்கிறார்.

பேச்சுவார்த்தை

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சசவூதி அரேபியாவிற்கு செல்ல இருக்கும் போரிஸ் ஜான்சன் அந்நாட்டு அதிகாரிகளுடன் பெட்ரோல் இறக்குமதி குறித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த வாரத்தில் இங்கிலாந்தின் தேசிய ஆற்றல் கொள்கையில் மாற்றங்கள் அறிவிக்கப்பட இருப்பதாகவும் ஜான்சன் குறிப்பிட்டிருக்கிறார்.

"இன்னும் 30 வருஷம் வாழணும்.." பிளான் போட்டிருந்த வார்னே.. கடைசில எல்லாம் தலைகீழ மாறிடுச்சு..

UK, UK PM, UK PM BORIS JOHNSON, SAUDI ARABIA, OIL SUPPLY, RUSSIA UKRAINE CRISISS, இங்கிலாந்து அதிபர், ரஷ்யா உக்ரைன் போர், சவூதி அரேபியா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்