'இப்படி ஒரு Bonus-ஆ?!!'... 'கொரோனாவால தம்பதிகள் இதை தள்ளிப்போட்டுட்டே போறாங்க, அதான்'... 'சிங்கப்பூர் அரசின் சூப்பர் அறிவிப்பு!'...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா காலத்தில் குழந்தை பெற்றுக் கொள்ளத் திட்டமிடும் தம்பதிகளுக்கு உதவித் தொகை வழங்க உள்ளதாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்களின் பொருளாதார நிலை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பணி நீக்கம், ஆட்கள் குறைப்பு, சம்பள குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இதன்காரணமாக தம்பதிகள் பலரும் குழந்தை பெற்றுக் கொள்வதை கூட தள்ளிவைப்பதாக தகவல்கள் வெளியானதால், இந்த முடிவை சிங்கப்பூர் அரசு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

உலகிலேயே மிக குறைந்த அளவிலான பிறப்பு விகிதம் கொண்ட நாடு சிங்கப்பூர் ஆகும். அங்கு1.12 சதவீதமாக உள்ள குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க கடந்த 1980ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூர் அரசு முயற்சித்து வருகிறது. இதற்காக பிரசாரங்களும் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக குழந்தை பிறப்பை தள்ளி போடுவது என தம்பதிகள் பலரும் முடிவு செய்திருப்பதால் பிறப்பு விகிதம் மேலும் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இதுபற்றி பேசியுள்ள சிங்கப்பூரின் துணை பிரதமர் ஹெங் ஸ்வீ கீட், "கொரோனாவால் தம்பதிகள் பலரும் குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளி வைத்துள்ளார்கள். நிரந்தர வருமானம் இல்லாத நிலையில் எப்படி குழந்தை பெற்றுக் கொள்வது என்ற அவர்களுடைய கவலையை அரசு புரிந்து கொள்கிறது. அதைப்போக்க கொரோனா காலத்தில் குழந்தை பெற்றுக் கொள்ளத் திட்டமிடும் தம்பதிகளுக்கு உதவித் தொகை வழங்க உள்ளோம். ஆனால் எவ்வளவு பணம் கொடுக்கப்படும் என இன்னும் முடிவு செய்யப்படவில்லை" எனத் தெரிவித்த்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்