'கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தாலும்'... 'ஒரு புது சிக்கல் இருக்கு'... 'நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!'...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த பின்னரும் அதில் ஏற்பட வாய்ப்புள்ள ஒரு சிக்கல் குறித்து அமெரிக்க நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
உலகமே கொரோனா பாதிப்பால் ஸ்தம்பித்துள்ள நிலையில் இந்தாண்டு முடிவதற்குள் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கையிலேயே உலக நாடுகள் உள்ளன. இந்நிலையில் தற்போது கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்டால் ஒரு டோஸ் மட்டுமே போதுமானதாக இருக்காது எனவும், மக்களுக்கு 2 டோஸ் அளவு மருந்து தேவைப்படும் என்பதால் இது மிகப் பெரிய சவாலாக இருக்கும் எனவும் அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்துப் பேசியுள்ள அமெரிக்க நிபுணர்கள், "கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தாலும், கொரோனா பாதித்தவர்களுக்கு ஒரு டோஸ் மட்டுமே போதாது. ஒவ்வொருவருக்கும் 2 டோஸ் மருந்து தேவைப்படும். இது மிகப்பெரிய சவால். வைரஸ் பாதிப்புக்கு பின் முழு கவச உடைகள், கையுறைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், தடுப்பூசியை இரட்டிப்பாக உற்பத்தி செய்ய வேண்டும் என்பது சவாலான பணியாகும்" எனத் தெரிவித்துள்ளனர். இதுபற்றி பேசியுள்ள டென்னசியில் உள்ள வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தின் சுகாதார கொள்கை பேராசிரியர் டாக்டர் கெல்லி மூர், இது மனித வரலாற்றில் மிகவும் கடினமான தடுப்பூசி திட்டமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இந்தியாவுல தீபாவளிக்குள்ள கண்டிப்பா'... 'தொடர்ந்து அதிகரிக்கும் பாதிப்புக்கு நடுவே'... 'நல்ல செய்தி சொன்ன சுகாதாரத்துறை மந்திரி!'...
- 'மாசக்கணக்குல நின்னுபோன... சினிமா ஷூட்டிங்!'.. 'தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கும்' அதிமுக்கிய அறிவிப்பு!
- 'நினைச்சத விட சீக்கிரமாவே தடுப்பூசி கிடைக்கலாம்'... 'எகிறும் பாதிப்பால்'... 'எப்டிஏ எடுத்துள்ள புதிய அதிரடி முடிவு'...
- 'தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்...' 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - இன்னும் கூடுதல் தகவல்கள்...!
- 'அன்லாக் 4.0'... 'ஊரடங்கு, இ-பாஸ் நிலை என்ன?'... 'மெட்ரோ ரயில் முதல் தியேட்டர் வரை'... 'எவற்றிற்கெல்லாம் தளர்வு?... 'மத்திய அரசின் புதிய அறிவிப்பு!'...
- '87 பேர் உயிரிழப்பு'... 'அதிகபட்சமாக சென்னையில் மட்டும்'... 'தமிழகத்தின் இன்றைய (ஆகஸ்டு 29, 2020) கொரோனா நிலவரம்'...
- 'பொது முடக்கம் நீட்டிப்பு'?... 'முதலமைச்சர் நடத்திய முக்கிய ஆலோசனை'... வெளியாகும் முக்கிய அறிவிப்புகள்!
- 'கொரோனா பயத்தால'... 'ஹாஸ்பிடல் பக்கமே போகாம இருக்கீங்களா?'... 'மருத்துவர்கள் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை!'...
- 'இங்க உயிரிழப்பு கம்மியாக இருப்பதற்கு'... 'இதுகூட ஒரு காரணமா?'... 'ஆய்வு கூறும் புதிய ‘ஆச்சரிய’ தகவல்!'...
- 'P.HD முடிச்சிட்டு டாக்டரா வருவான்னு தானே இருந்தோம்'... 'மொத்த கனவையும் நொறுக்கிய காது வலி'... ஏர்போர்ட்டில் நடந்த துயரம்!