நடுக்கடலில் கப்பலில் ஏற்பட்ட கோளாறு .. தடுமாறிய 1300 பயணிகள்.. திக் திக் நிமிடங்கள்!

முகப்பு > செய்திகள் > World news
By |

நார்வே நாட்டின் ஹஸ்டர்ஸ்விகா பே பகுதியில் இருந்து வைகிங் ஸ்கை என்ற சொகுசுக்  கப்பல் 1300-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுடன் ஞாயிறன்று புறப்பட்டது.  நடுக்கடலில் சென்றபோது திடீரென என்ஜினில் ஏற்பட்ட கோளாறால் அந்த  சொகுசுக் கப்பல் தத்தளித்தது.

6 லிருந்து  8 மீட்டர் அளவு உயரே எழுந்த பேரலையில் இந்த சொகுசுக் கப்பல் இங்கும் அங்கும் தள்ளாடிய காட்சிகள் வீடியோக்களாக இணையத்தில் பரவி உலகம் முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றன. 

இதனால்  கப்பல் மாலுமிகள் மற்றும் பயணிகள் செய்வதறியாது திகைத்தனர். மேலும் அபாய ஒலி எழுப்பப்  பட்டதுடன்  மீட்புப் படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் விரைந்து வந்த மீட்புக் குழுவினர் கப்பலில் இருந்து பயணிகளை மீட்க முயற்சி மேற்கொண்டனர். ஆனால் பேரலைகள் எழுந்ததால் பயணிகளை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது.

பின்னர் ஹெலிகாப்டர்களின் உதவியுடன் தத்தளித்த  சொகுசுக் கப்பலில் இருந்து பயணிகள் மற்றும் மாலுமிகளை மீட்பு படையினர் 24 மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் பத்திரமாக மீட்டனர். காயமடைந்த சுற்றுலாப் பயணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கப்பலில் உள்ள என்ஜின்கள் சரிசெய்யப்பட்டு துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. பயணிகளை பத்திரமாக  மீட்ட மீட்புக் குழுவினருக்கு அந்நாட்டின் பிரதமர் எர்னா சோல்பெர்க் நன்றி தெரிவித்துள்ளார் .

இதனிடையே, கப்பலில் இருந்து உயிர்பிழைத்து வந்த சுற்றுலாப் பயணிகள் தங்களது அனுபவங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

ACCIDENT, VIKINGSKY, MAYDAY

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்