‘இனி இது போன்று நடக்காது’..கண்ணீர் மல்க ஆறுதல்.. நெகிழ வைத்த நியூஸிலாந்து பிரதமர்!

முகப்பு > செய்திகள் > World news
By |

நியூஸிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டெர்ன் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரிடம் கண்ணீர் மல்க ஆறுதல் தரும் வீடீயோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த மார்ச் மாதம் 15 -ம் தேதி நியூஸிலாந்தில் உள்ள மசூதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இதற்கு உலகத் தலைவர்கள் பலரும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

இதனை அடுத்து நியூஸிலாந்தின் பிரதமரான ஜெசிண்டா ஆர்டெர்ன் அவசரமாக எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் நிதானமாக செயல்பட்டார். முதலாவதாக நியூஸிலாந்தில் துப்பாக்கி பயன்பாட்டின் கட்டுப்பாட்டுச் சட்டங்களை விரைவாகச் செயல்படுத்தப்படும் என்று வாக்குறுதிகொடுத்தார்.

துப்பாக்கி சூடு நடந்த மசூதிக்கு வெளியே மெல்லிய கறுப்புத் துணியை தலையில் அணிந்துவாறு வந்த ஜெசிண்டா உயிரிழந்தோரின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து பேசிய அவர்,‘இதுபோன்ற கேவலமான காரியத்தை செய்பவர்களை கடுமையாக கண்டிக்கிறேன். இதுபோன்று செய்பவர்களுக்கு இந்த மண்ணில் இடம் கிடையாது. இனிமேல் இதுபோன்ற சம்பவம் நிகழாது. இது நியூஸிலாந்தின் உண்மையான முகம் இல்லை. பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒன்று திரண்டு இங்கு நாம் ஆறுதல் கூறிகொண்டிருக்கிறோம். இந்த ஒற்றுமைதான் உண்மையான முகம்’ என அவர் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டில் உறவினர்களை இழந்து கதறி அழும் பெண்களைக் கட்டிஅணைத்து கண்ணீர் மல்க ஆறுதல் கூறும் நியூஸிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டெர்னை இணையத்தில் பலரும் புகழ்ந்து வருகின்றனர்.

NEWZEALANDSHOOTING, JACINDAARDERN, VIRALVIDEO

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்