‘60 நாள் சும்மாவே படுத்திருந்தா, 13 லட்சம் சம்பளம்’.. இப்டி ஒரு வேலையா?.. ஆச்சரியப்பட வைத்த நிறுவனம்!

முகப்பு > செய்திகள் > World news
By |

ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் மற்றும் நாசா இணைந்து நடத்தும் ஆராய்ச்சி ஒன்றிற்கு 60 நாள்கள் சும்மாக படுத்துக் கொண்டே இருந்தால் 13 லட்சம் சம்பளம் என அறிவித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

செயற்கை புவி ஈர்ப்பு விசை இல்லாத இடங்களில் தூக்கம் வருவது தொடர்பான ஆராய்ச்சியை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளன.

இந்த ஆராய்ச்சி ஜெர்மனியில் நடத்தப்பட உள்ளது. இதில் ஜெர்மனி மொழி பேச தெரிந்த 12 ஆண்கள் மற்றும் 12 பெண்கள் கலந்து கொள்ள உள்ளனர். அதில் அவர்களுக்கான வேலை என்னவென்றால் 60 நாள்களும் ஒரே இடத்தில் படுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

இதற்காக இந்திய மதிப்பில் சுமார் 13 லட்சம் சம்பளம் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வேலையில் முக்கியமான விஷயம் என்னவெனில் உணவு, கழிப்பறை என அனைத்தும் படுத்த இடத்திலேதான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒரு குழுவை புவி ஈர்ப்பு இல்லாத பகுதியில் 60 நாள்கள் தங்க வைக்கப்பட்டு, அதன்பிறகு அவர்களின் மனநிலை பரிசோதிக்கபட இருக்கிறது.

விண்வெளியில் புவி ஈர்ப்பு விசை இல்லாத நிலையில், அப்போது விண்வெளி வீரர்களுக்கு எந்த வகையில் இது உதவக்கூடும் என்பதற்காக இந்த ஆராய்ச்சி நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

WORK, NASA

OTHER NEWS SHOTS