‘நடுக்கடலில் விழுந்த இளைஞர்’.. ஜீன்ஸ் பேன்ட் மூலம் உயிர் தப்பிய அதிசயம்.. வைரலான வீடியோ!

முகப்பு > செய்திகள் > World news
By |

நியூஸிலாந்தில் எதிர்பாராத விதமாக கடலில் விழுந்த இளைஞர் ஒருவர் ஜீன்ஸ் பேன்ட்டின் மூலம் நீந்தி உயிர் பிழைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நியூஸிலாந்து நாட்டின் தொலாகோ பே என்கிற கடற்பகுதியில், ஜெர்மனியைச் சேர்ந்த சகோதரர்கள் படகு மூலம் பயணம் செய்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆர்னே மிர்கே என்பவர் கடலில் விழுத்துள்ளார். ஆனால் இதை அவரின் சகோதரர் கவனிக்காமல் சென்றுள்ளார்.

சிறிது நேரம் கழித்து ஆர்னே படகில் இல்லாததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரின் சகோதரர் உடனே மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனை அடுத்து வந்த மீட்பு குழுவினர் ஹெலிகாப்டரின் உதவியுடன் தீவிர தேடுதல் பணியை மேற்கொண்டனர்.

இந்நிலையில் பல மணிநேர தேடுதலுக்கு பிறகு கடலில் நீந்தியபடி வந்த ஆர்னேவை மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர். இவர் தனது ஜீன்ஸ் பேன்ட்டின் இரு கால் நுனிப் பகுதிகளையும் முடிச்சிப்போட்டு அதில் காற்றை நிரப்பி மிதவையாக பயன்படுத்தி உயிர் தப்பியுள்ளார்.

SEA, SWIMMING, JEANSPANT, VIRALVIDEO

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்