தேனிலவு பயணத்தில் ‘எரிமலை பள்ளத்துக்குள் விழுந்த கணவன்..’ மனைவி செய்த காரியம்..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தேனிலவு பயணத்தின்போது எரிமலை பள்ளத்தில் விழுந்த கணவனை மனைவி போராடிக் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் இண்டியான பகுதியைச் சேர்ந்த இளம் தம்பதியான கிளே சாஸ்டேன் , அகைமியி சாஸ்டேன் இருவரும் தேனிலவுக்காக கரீபியன் பகுதியில் உள்ள ஒரு செயலிழந்த எரிமலைக்குச் சென்றுள்ளனர். அவர்கள் அதன் உச்சிக்குச் சென்றபோது எரிமலையை இன்னும் சரியாகப் பார்க்க விரும்பிய கிளே சற்று கீழே இறங்க முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாகத் தவறி விழுந்த அவர் 50 அடி வரை உள்ளே சென்றுள்ளார்.

அங்கு உதவிக்கு யாரும் இல்லாத நிலையில் அவருடைய மனைவி அகைமியி மிகவும் சிரமப்பட்டு அவரைக் காப்பாற்றியுள்ளார். பின்னர் ஒருவழியாக இருவரும் எரிமலையை விட்டு வெளியே வந்துள்ளனர்.

பள்ளத்தில் விழுந்த கிளேவுக்கு முகத்தாடையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தன்னுடைய ஃபேஸ்புக்கில் இதுபற்றி பதிவிட்டுள்ள கிளே, “மிகவும் வலிமை வாய்ந்த என்னுடைய மனைவி எப்படியோ என்னைப் பள்ளத்திலிருந்து காப்பாற்றி விட்டார்” என உருக்கமாகக் கூறியுள்ளார். இதற்கு அவருடைய மனைவி, “இப்படியொரு பயணத்திற்கு மீண்டும் என்னை அழைத்துச் செல்லாதீர்கள்” எனக் கிண்டலாகக் கூறியுள்ளார்.

HONEYMOON, TRIP, USA, COUPLE, VOLCANO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்