VIDEO: ‘உலகையே பதற வைத்த கோர வெடி விபத்து...’ எப்படி வெடி விபத்து நடந்தது...? ‘காரணத்தை வெளியிட்ட லெபனான் பிரதமர்...’ உயிரிழப்பு எத்தனை..? – ஈரக்குலையை நடுங்க வைத்த சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று பயங்கரமான வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தினால் துறைமுக பகுதி முழுவதும் தீப்பிழம்புகளும் கரும்புகைகளுமாக  காணப்பட்டது.

பெய்ரூட் பகுதி மட்டுமல்லாமல் அந்த நகரில் இருந்து 200 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள தீவுகளிலும் இந்த வெடிவிபத்தின் தாக்கம் உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.  இந்த வெடிவிபத்தில் சிக்கி  தற்போது வரை 73 பேர் உயிரிழந்துள்ளனர். 3 ஆயிரத்து 700 பேர் காயமடைந்துள்ளதாக லெபனான் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில், துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த மிகவும் ஆபத்து நிறைந்த வெடிக்கக்கூடிய அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் தான் இந்த கோர வெடிவிபத்து நடைபெற்றுள்ளதாக லெபனான் பிரதமர் ஹசன் டியப் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து குறித்து லெபானான் பிரதமர் தெரிவிக்கையில், ’’எவ்வித பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படாமல் மக்களுக்கு ஆபத்து தரக்கூடிய வகையில் பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில்  6 ஆண்டுகளாக 2 ஆயிரத்து 750 ரன் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாது, உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்