'வெறும் 87 ரூபாய்க்கு ஏலத்திற்கு வரும் வீடுகள்!!!'... 'அதுவும் எந்த நாட்டுலனு தெரியுமா?'... 'அசத்தல் அறிவிப்புக்குப்பின் இப்படியொரு காரணமா?!!'...
முகப்பு > செய்திகள் > உலகம்சலேமி நகரில் தொடக்க விலையாக வெறும் ஒரு யூரோவிற்கு வீடுகள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது.
இத்தாலி நாட்டிலுள்ள சிசிலி பகுதியின் தென் மேற்கு பகுதில் உள்ள நகரமான சலேமி மிகவும் அழகு பொருந்திய இத்தாலியின் வரலாற்று சிறப்புமிக்க தலங்களில் ஒன்றாகும். இதை சுற்றி ஏராளமான திராட்சை தோட்டங்களும், ஆலிவ் தோப்புகளும் இருக்கின்றன. மிக பழைமையான நகரமான சலேமியில் 1600களில் கட்டமைக்கப்பட்ட சுவர்கள் இன்னும் கம்பீரமாக நின்றுகொண்டிருக்கும் நிலையில், 1968ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்கிருந்து 4000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறிவிட்டதால் தற்போது அது ஒரு கைவிடப்பட்ட நகரமாக உள்ளது.
இந்நிலையில் சலேமி நகரத்திற்கு மீண்டும் புத்துயிர் கொடுப்பதற்காக அங்கிருக்கும் வீடுகளை தொடக்க விலையாக வெறும் 1 யூரோவுக்கு ஏலத்தில் விற்பனை செய்ய இத்தாலி அரசு முடிவு செய்துள்ளது. ஒரு யூரோவின் இந்திய ரூபாய் மதிப்பு 87 ரூபாய் ஆகும். தற்போது சலேமியில் இருக்கும் அனைத்து வீடுகளும் நகர கவுன்சிலுக்கு சொந்தமானவையாக உள்ள சூழலில், இப்படி அந்த நகரிலுள்ள வீடுகளை ஏலத்தில் விற்பனை செய்வதால் கைவிடப்பட்ட அழகிய சலேமி நகருக்கு புத்துயிர் கிடைக்கும் என நம்புவதாக அந்நகர மேயர் டொமெனிகோ வெனுடி தெரிவித்துள்ளார். மேலும் தற்போது சலேமி அடுத்தகட்டத்துக்கு தயாராகிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு கைவிடப்பட்ட இத்தாலிய நகரங்களில் மிகக் குறைவான விலைக்கு வீடுகள் விற்பனைக்கு வந்துள்ளன. மக்கள் வெளியேற்றத்தை தடுக்கவும், புதிய மக்களை அழைத்துவந்து பழைய நகரங்களுக்கு புத்துயிர் ஊட்டவும் அங்கு குறைந்த விலையில் வீடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு தெற்கு இத்தாலியில் உள்ள சம்புகா நகரில் வெறும் ஒரு டாலருக்கு வீடுகள் விற்பனை செய்யப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “மாட்டோம்... இது எங்க வீடு!”.. '43 வருஷமாக வாடகை வீட்டை சொந்தம் கொண்டாடிய குடும்பம்!'.. 'நொடியில் மளமளவென சரிந்து தரைமட்டமாகிய 5 மாடி குடியிருப்பு பில்டிங்!'.. சென்னையில் பரபரப்பு!
- "என்னது!... 2021லயும் இதே நெலம தானா???"... 'ஐபிஎல் விதியால்'... 'CSKவுக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் மிகப்பெரிய சிக்கல்கள்!!!'...
- ‘100 வருடம் பழமையான 1 ரூபாய் நாணயத்துக்கு ரூ.25 லட்சமா?’.. ‘அடிச்சுது ஜாக்பாட்னு நினைச்சவங்களுக்கு’.. ‘ஆன்லைன் வர்த்தக நிறுவனம் கூறியது என்ன?’
- 'தனது' குடிசைக்கு 'தானே' தீவைத்து 'எரித்துவிட்டு'... 'போலீஸில்' புகார் அளித்த 'இளைஞர்'!.. ‘இப்படியும் ஒரு காரணமா?’
- 'பேக்ரவுண்ட்ல வயலின் இசை...' 'பால்கனியில நின்னு பார்த்த அடுத்த செகண்டே லவ் பத்திக்கிச்சு...' - லவ் ப்ரபோஸ் பண்ணினது தான் வாவ் சர்ப்ரைஸ்...!
- 'இனி சின்ன சின்ன ஊர்கள் தான் டார்கெட்'... 'தமிழ்நாட்ல எந்த ஊர்?'... IT ஊழியர்களுக்கு 'ஜாக்பாட்' அறிவிப்பை வெளியிட்ட பிரபல சாஃப்ட்வேர் நிறுவனம்!...
- “சென்னையில் OLX, நோ புரோக்கர்-ல வீடு பாக்குறவங்க உஷார்!”.. வாடகை, லீஸுக்கு வீடு தேடுபவர்களை குறிவைத்து மோசடி!
- 'பாழடைஞ்சு கெடந்த வீட்ல கட்டுக்கட்டா பணம் நகை...' 'வீடு இருந்தும் 2 பாட்டிகளுக்கும் ரோட்ல தான் வாழ்க்கை...' - விஷயம் தெரிஞ்சு போலீசார் செய்த காரியம்...!
- 'இதுவரை இருந்த மிகப்பெரும் சவால்'... 'வெளியாகியுள்ள வாக்சின் செயல்பாட்டுக்கு உதவும் நல்ல செய்தி'... 'ஆய்வில் நம்பிக்கையூட்டும் தகவல்!'...
- 'ஐயா...! எங்க வீடுகளை காணோம்யா...' 'கண்டு புடிச்சு கொடுங்க...' 'வடிவேலு காமெடி போல்...' - புகார் அளித்த பொதுமக்கள்...!